National Press Day : ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம்’ : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் முக்கிய அங்கமாக விளங்கும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

Continues below advertisement

தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தேசிய பத்திரிகை தினம்

1996 -ஆம் ஆண்டு முதல் தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவம்பர்,16-ம் தேதி ‘தேசிய பத்திரிகை தின’மாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் முக்கிய அங்கமாக விளங்கும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

1956- ஆம் ஆண்டு பத்திரிகை நெறிமுறைகளைப் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என நோக்கத்தில் சட்டப்பூர்வ அதிகாரத்துடன் கூடிய ஒரு அமைப்பை உருவாக்க பத்திரிகை ஆணையம் முடிவு செய்தது. இதன் மூலம் பத்திரிகையாளர்களுடன் தொடர்பு கொள்ள, ஏதேனும் பிரச்னைகள் இருப்பின் நடுவராக செயல்பட ஒரு நிர்வாக அமைப்பு தேவை என்று உணர்ந்து எடுக்கப்பட்ட முடிவு. அதனடிப்படையில் இந்திய பத்திரிகை கவுசில் உருவானது. 

கவுன்சில் நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. பத்திரிகை கவுன்சில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் 28 கூடுதல் உறுப்பினர்கள் என ஒரு குழுவாக தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள். இதில் 20 பேர் ஊடக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். 5 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து பரிந்துரைக்கப்படுவார்கள். மீதமுள்ள 3 பேர் கலாசார, சட்ட மற்றும் இலக்கியத் துறைகளைப் பிரநிதிப்படுத்தும் வகையில் இருப்பர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தேசிய பத்திரிகை தினத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் “ உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சியின் கண்காணிப்பாளர்! எனவே, தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம். அரசியல் அழுத்தங்களுக்கு சிலர் அடிபணியும் இக்காலத்தில், சார்பற்ற நேர்மையான ஊடகவியலை முன்னெடுத்த, சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம். “ என்று தெரிவித்துள்ளார்.

தேசிய பத்திரிக்கை தினம் - சில புகழ்பெற்ற 

"நமது சுதந்திரம் பத்திரிகை சுதந்திரத்தைப் சார்ந்துள்ளத; அது உள்ளவரை நம்மை மட்டுப்படுத்த முடியாது" - தாமஸ் ஜெபர்சன்

"பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்திற்கு அவசியமானது மட்டுமல்ல, அதுதான் ஜனநாயகமே" - வால்டர் குரோன்கைட்

"பத்திரிக்கை சுதந்திரம் என்பது எந்த நாடும் கைவிட முடியாத ஒரு விலைமதிப்பற்ற பாக்கியம்" - மகாத்மா காந்தி

”சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கே பத்திரிகை சுதந்திரம் உத்தரவாதம்" - ஏ. ஜே. லிப்லிங்

"சுதந்திரமான பத்திரிகை என்பது ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று" - நெல்சன் மண்டேலா

"பத்திரிகை சுதந்திரமானது மட்டும் அல்ல, சக்தி வாய்ந்ததும் கூட. அந்த சக்தி நம்முடையது. மனிதன் அனுபவிக்கக்கூடிய பெருமை அது" - பெஞ்சமின் டிஸ்ரேலி


மேலும் வாசிக்க..Rohit Sharma: ”யாரை நம்பியும் பலனில்லை, உலகக் கோப்பையே இலக்கு” - ரோஹித் சர்மா: தானோஸ் பாணியில் வாகை சூடுவாரா?

மேலும் வாசிக்க..AI Pin: இனி ஃபோனே வேண்டாம்..! AI Pin என்றால் என்ன? கையடக்க சாதனம் கொண்டுள்ள ஆச்சரியம் தரும் அம்சங்கள்

Continues below advertisement