- TN Rain Alert: நீடிக்கும் கனமழை...10 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 15-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க
- ஓபிஎஸ்-க்கு அடுத்த செக்: 20 முறை கடிதம் எழுதிய இபிஎஸ்? - சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கிடையே நிலவி வந்த பிரச்னை ஒரு வழியாக நீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறார். கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது. மேலும் படிக்க
- "சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது” ...கடிவாளம் போட்ட தலைமை நீதிபதி!
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அவர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட, இரண்டு ரிட் மனுக்களும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் படிக்க
- Kalaignar Urimai thogai Thittam: புதிதாக 7.3 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000; கலைஞர் உரிமைத்தொகை 2ஆம் கட்டம் தொடக்கம்
கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் 2ஆம் கட்டம் தொடக்க விழாவை இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் மேல்முறையீடு வாயிலாக 7.3 லட்சம் மகளிருக்கு மாதாமாதம் ரூ.1000 கிடைக்க உள்ளது. திருநங்கைகளுக்கும் ரூ.1000 தொகை வழங்கப்பட்டது. இதற்கிடையே தீபாவளியை ஒட்டி ரூ.1000 தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டது. இன்று காலை முதல் மகளிர் வங்கிக் கணக்கில் பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
- CM Stalin: ”ஓய்வு எடுக்க சொன்னார்கள்; மக்களை சந்திக்காமல் இருக்க முடியவில்லை” - முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை கலைவாணர் அரங்கில் மகளிர் உரிமைத் தொகையின் இரண்டாம் கட்ட திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ”கடந்த சில நாட்களாக காய்ச்சலும், தொண்டை வலியும் எனக்கு இருந்தது. காய்ச்சல் குறைந்தாலும் தொண்டை வலி இருக்கிறது. தொண்டை வலியை விட தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது என்பதால் வந்துவிட்டேன். இந்த வாரம் முழுவதும் மருத்துவர்கள் என்னை ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். ஆனால், என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியாது. மேலும் படிக்க