CM Stalin: தொண்டை வலியை விட தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது என்பதால் வந்துவிட்டேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
"தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது”
சென்னை கலைவாணர் அரங்கில் மகளிர் உரிமைத் தொகையின் இரண்டாம் கட்ட திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ”கடந்த சில நாட்களாக காய்ச்சலும், தொண்டை வலியும் எனக்கு இருந்தது. காய்ச்சல் குறைந்தாலும் தொண்டை வலி இருக்கிறது. தொண்டை வலியை விட தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது என்பதால் வந்துவிட்டேன். இந்த வாரம் முழுவதும் மருத்துவர்கள் என்னை ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். ஆனால், என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியாது.
அதனால் உங்களை சந்திக்க வந்துள்ளேன். தேர்தலுக்கு முன்பு மகளிர் உரிமை தொகை குறித்து அறிவித்த போது, இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது, திமுக ஆட்சிக்கே வராது என்றார்கள். ஆனால், நீங்கள் ஆட்சிக்கு வர வைத்தீர்கள். செயல்படுத்த முடியாது எனக் கூறிய மகளிர் உரிமைத் திட்ட வாக்குறுதியை செயல்படுத்தி உள்ளோம்.
செப்டம்பர் 15ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கான மகளிர் உரிமை தொகை 1.6 கோடி மகளிருக்கு வழங்கப்படுள்ளது. இத்ந முறை முன்கூட்டியே இன்று மாலைக்குள் இந்த மாதத்திற்கான 1000 ரூபாய் மகளிருக்கு வழங்கப்படும்” என்றார்.
"பாரபட்சமின்றி தகுதியுள்ளவர்களுக்கு மகளிர் உரிமை தொகை”
தொடர்ந்து பேசிய அவர், "தேவையும், தகுதியும் உள்ள அனைத்து மகளிருக்கும் இந்த உரிமை தொகை சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். தகுதி உள்ள மகளிருக்கு மகளிர் உரிமை தொகை வழங்குகிறோம். ஆனால் இது தேர்தல் வாக்குறுதிக்கு முரன் என சிலர் விமர்சிக்கின்றனர். 2 கோடிக்கும் மேல் ரேசன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில் 1.63 கோடி மக்கள் விண்ணப்பித்தனர். இதில் தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமை தொகை என்பதில் மக்கள் புரிந்துவிட்டனர். மக்களின் புரிதலே இந்த திட்ட விதிமுறைகளுக்கான நியாயத்தை காட்டியது. அரசின் பக்கம் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு தகுதியானர்கள் மேற்முறையீடு செய்தனர்.
எனவே பாரபட்சமின்றி தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் எந்தவித புகாரும் இன்றி செயல்படுத்தப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்னோடியாக உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 7.35 லட்சம் பயனாளிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். உங்களுகான ஆயிரம் ரூபாய் நேற்றே வரவு வைக்கப்பட்டுவிட்டது. விண்ணப்பித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படாத காரணத்தை குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைத்தோம். எனவே, 1.13 கோடி பேர் இந்த திட்டம் மூலம் 1000 ரூபாய் பெற தகுதியானவர்கள். இந்த திட்டம் இமாலய வெற்றி பெற உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மேலும் படிக்க