TN Weather: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - அடுத்த 7 தினங்களுக்கான வானிலை அப்டேட்!


தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள்,  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க..


Nilgiris Local Holiday: உலகப் புகழ்பெற்ற உதகை மலர்க்கண்காட்சி; நீலகிரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு


மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த போதிலும், ஏப்ரல், மே ஆகிய கோடை மாதங்களில் அதிகளவில் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கோடை விழாவில் காய்கறி காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி, பழக்காட்சி உள்ளிட்டவை விமரிசையாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. மேலும் படிக்க..


தமிழ் புதல்வன் திட்டத்தால் மாணவர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! மாதாமாதம் ரூ.1000: எப்போது?


’நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி இன்று சென்னையில் தொடங்கியது. இதில், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1000 திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க..


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இடிந்து விழுந்த கோபுரம் சீரமைப்பு பணிகள் தொடக்கம்


108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாத சுவாமி அல்லது ஸ்ரீரங்கநாதர் திருக்கோவில். இந்த கோவில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் என்ற ஊரில், காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் இந்தியாவிலேயே அதிக பரப்பளவு கொண்ட கோவிலாகவும், ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய பெருமாள் கோவிலாகவும் விளங்குகிறது. மேலும் படிக்க..


மீண்டும் மீண்டுமா...! விழுப்புரம் வாக்கு எண்ணும் மையத்தில் 45 நிமிடங்கள் சிசிடிவி கேமரா செயலிழப்பு


விழுப்புரம் வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் மீண்டும் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பலத்த மழை காரணமாக 45 நிமிடங்கள் சிசிடிவி கேமிராக்கள் செயலிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க..


ஜெயக்குமார் உயிரிழப்பில் விலகும் மர்மம்..!! வெளியான ஆதாரங்களால் புதிய திருப்பம்..!!


நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் தற்போது பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ளது. ஜெயக்குமார் எழுதியதாக வெளியான இரண்டு கடிதங்கள் அடிப்படையில் முதலில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த சம்பவங்கள் கொலையாக இருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக  வெளியாகி வருகிறது. மேலும் படிக்க..