108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாத சுவாமி அல்லது ஸ்ரீரங்கநாதர் திருக்கோவில். இந்த கோவில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் என்ற ஊரில், காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் இந்தியாவிலேயே அதிக பரப்பளவு கொண்ட கோவிலாகவும், ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய பெருமாள் கோவிலாகவும் விளங்குகிறது. சோழர், பாண்டியர், சேரர், விஜய நகர பேரரசர்கள் என பல மன்னர்களால் சீர் அமைக்கப்பட்ட பெருமை இந்த கோவிலுக்கு உண்டு. இந்திய கோவில்களிலேயே மிக உயரமான கோபுரம் கொண்டது ஸ்ரீரங்கம் கோவில் தான்.




ஸ்ரீரங்கம் கோவில் உருவான வரலாறு..


விபீஷணனுக்கு செல்லும் வழியில் அன்றைய தினத்திற்கான பூஜைக்கு நேரமாகி விட்டதால், சிறுவன் ரூபத்தில் வந்த விநாயகரிடம் அந்த சிலையை வைத்திருக்கும் படி சொல்லி விட்டு, காவிரியில் நீராட சென்று விட்டான் விபீஷணன். ஆனால் விபீஷணன் வர நேரமானதால், அந்த சிலையை ஆற்றங்கரையிலேயே வைத்து விட்டு மறைந்தார் விநாயகர். கரையில் வைக்கப்பட்டதும் சிலை பெரிதாக மாறியதால் குழப்பமடைந்த விபீஷணன், அந்த சிலையை அங்கிருந்து இலங்கை கொண்டு செல்ல எவ்வளவு முயன்றும் முடியவில்லை. இதனால் அழுது, கலங்கிய விபீஷணனிடம் தான் காவிரி ஆற்றங்கரையிலேயே இருக்க விரும்புவதாக அசரீரியாக வந்து சொல்லிய நாராயணன், விபீஷணனுக்கு இலங்கை இருக்கும் தென் திசை நோக்கி பார்த்தவாறு வீற்றிருப்பதாகவும் வாக்களித்தார். இப்பகுதியை ஆண்டு தர்ம வர்ம சோழன் தான் ரங்கநாதருக்கு ஆலயம் எழுப்பினான். பிறகு ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த கோயில் ஆற்று மணலில் புதைந்தது. பிறகு கிளிச்சோழன் என்ற மன்னன் மண்ணில் புதைந்த கோயிலை மீட்டு, சீரமைத்தான். ஆழ்வார்கள் அனைவராலும் பாடப்பட்ட இந்த தலத்தில், ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், அரங்கன் சேவைக்கே தன்னை அர்ப்பணித்து, அவரோடு ஐக்கியமானாள். இதை போல் டில்லி சுல்தானின் மகளும் பெருமாள் மீது கொண்ட பக்தியால் அவரோடு ஐக்கியமானதாகவும், இவரே துலுக்க நாச்சியாராக அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.




ஸ்ரீரங்கம் கோபுரத்தில் விரிச்சல் சீரமைக்கும் பணிகள்.. 


திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அதிகரித்தே வருகிறது. குறிப்பாக இந்த கோவிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கோபுரங்கள் அனைத்தும் பார்ப்பவர்களின் மனதை ஆக்கிரதப்படுத்தும் அளவிற்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆக., 4ம் தேதி நள்ளிரவில், கோபுரத்தில் உள்ள முதல் மாடத்தின் பூச்சு மற்றும் சுதை சிற்பங்கள் இடிந்து விழுந்தன. ஸ்ரீரங்கம் கோவிலில், தாமோதர கிருஷ்ணன் கோபுரம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தாமோதர கிருஷ்ணன் கோபுரத்தில் முதல் மற்றும் இரண்டாவது மாடங்களில் விரிசல் ஏற்பட்டிருந்தது. சிதிலமடைந்த கோபுரத்தில், பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக, 67 லட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு தயார் செய்து, டெண்டர் அறிவிக்கப்பட்டு இருந்தது. இடிந்த கோபுர சுவர் மற்றும் சுதை சிற்பங்கள், சிற்ப சாஸ்திர வல்லுநர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள் கொண்ட வல்லுநர் குழு வழிகாட்டுதல்படி, பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி துவங்கி உள்ளது. இந்த பணியை, ஒன்றரை ஆண்டில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது, என்று ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.