தமிழ்நாடு முழுவதும் 10 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  


இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்," சென்னை, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி,  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபய் குமார் சிங்,  சென்னை, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். 


அதேபோன்று, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் உள்ள மகேந்திர குமார் ரத்தோட்,    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்து வந்த கார்த்திகேயன் ஐ.பி.எஸ், திருச்சி காவல் ஆணையராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி காவல் ஆணையராக இருந்து வந்த அருண் ஐ.பி.எஸ், சென்னை காவல் பயிற்சி பிரிவு காவல்துறை ஆணையராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


 






 


சரவண சுந்தர் ஐபிஎஸ், திருச்சி சரக டிஐஜி-ஆக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி சரக டிஐஜி ஆக இருந்து வந்த ராதிகா ஐபிஎஸ், தரமிறக்கம் செய்யப்பட்ட சென்னை ஐஜியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.    


கட்டாய காத்திருப்பு காலத்தில் உள்ள நிசா ஐபிஎஸ், சென்னை கணினிமயமாக்கல் பிரிவு காவல் கண்காளிப்பாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  




சென்னை, சிபி சிஐடி சிறப்பு குற்றப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த மாடசாமி, வடக்கு சரக சட்டம் ஒழுங்கு உதவி ஆணையாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


வடக்கு சரக சட்டம் ஒழுங்கு உதவி ஆணையாளராக இருந்த ஆர்.வேதரத்தினம், சென்னை காவல்துறை கண்காளிப்பாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


மேலும், வாசிக்க:   


7 ias officer transfers: 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு


IAS IPS Transfer : அடிக்கடி நடக்கும் ட்ரான்ஸ்பர்.. மிரளும் அதிகாரிகள் - காரணம் என்ன தெரியுமா?   


IPS Officers Transferred | 27 காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு  


Anna University | அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 2 நாளுக்குள்ள அப்ளை பண்ணுங்க