சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பச் செயலாக்க மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.


சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 1978-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்கிறது. இங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றி வரும் நிலையில் தற்போது இப்பல்கலைக்கழகத்தின்  தொழில்நுட்ப செயலாக்க மையத்தில் Technology commercialization Executive , ஆபிஸ் அசிஸ்டன்ட் மற்றும் டிரைவர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் இப்பணிக்கான விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Technology commercialization Executive பணிக்கான தகுதிகள்:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக், எம்பிஏ தேர்ச்சியுடன் டெக்னாலஜி, மேனேச்மென்ட், புரடெக்சன் மேனேச்மென்ட், பிசினஸ் டெவலப்மெண்ட் புரடெக்சன் புரமோசன் பிரிவில் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.  இவர்களுக்கு மாதம் ரூபாய் 50 ஆயிரம் சம்பளம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Project associate பணிக்கான தகுதிகள்: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்.எஸ்சி தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். இதோடு சேல்ஸ் கோ- ஆர்டநேஷன், பைல் மேனேச்மென்ட், ஆபிஸ் மேனேச்மென்ட், டிஜிட்டர் மார்க்கெட்டிங், பேட்டா மேனேச்மென்ட் பிரிவில் 5 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு சம்பளம் ரூ.20 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Project assistant பணிக்கான தகுதிகள்: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்.எஸ்சி தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். வெப்சைட் டெவலப்மென்ட் மற்றும் மேனேச்மென்ட், சேல்ஸ் சப்போர்ட் டிஜிட்டல் மார்க்கெட்டிங் டாக்குமென்டேஷனில் 2 ஆண்டு பணிமுன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.


Office assistant cum driver பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள்  www.annauni.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களையெல்லாம் பூர்த்திக்கொள்ள வேண்டும். அதனுடன் முழு விபரங்கள் அடங்கிய பயோ டேட்டா மற்றும் சுய சான்றொப்பம் போன்றவை இணைத்து  The Director, Center for technology development and transfer, Anna university, Chennai -600025 என்ற முகவரிக்கு செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதோடு மறக்காமல் அஞ்சல் உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை மறக்காமல் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.