தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
23.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
24.03.2023 முதல் 26.03.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
பென்னாகரம் (தருமபுரி) 9, திருமங்கலம் (மதுரை), மிமிசல் (புதுக்கோட்டை) தலா 5, வெட்டிகாடு (தஞ்சாவூர்) 4, மதுரை விமான நிலையம் (மதுரை), மாரண்டஹள்ளி (தருமபுரி), நகுடி (புதுக்கோட்டை), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) தலா 3, பாம்பன் (ராமநாதபுரம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), காரியாபட்டி (விரிதுநகர்), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 2, மணமேல்குடி (புதுக்கோட்டை), மண்டபம் (ராமநாதபுரம்), ஆயின்குடி (புதுக்கோட்டை), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), திருவையாறு (தஞ்சாவூர்), சிவகிரி (தென்காசி), பாபநாசம் (தஞ்சாவூர்), ராமேஸ்வரம் (இராமநாதபுரம்), குப்பணம்பட்டி (மதுரை) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை என வானிலை மையம் தெரிவிடக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.