TN Urban Local Body Election News LIVE: பரப்புரை கட்டுப்பாடுகளில் தளர்வு.. விறுவிறு பரப்புரை செய்திகள் உடனுக்குடன்..

TN Urban Local Body Election 2022 News LIVE Updates: தமிழ்நாடு முழுவதும் இன்று வேட்புமனு மீது பரிசீலனை செய்யப்பட இருக்கிறது.

ABP NADU Last Updated: 11 Feb 2022 01:51 PM
’நகரமன்ற தலைவராக்கினால் கட்சிக்கு 50 லட்சம் செலவு செய்ய தயார்’ - பொள்ளாச்சி திமுக பெண் வேட்பாளரின் கடிதத்தால் சர்ச்சை..!

திமுகவை உதயநிதிதான் நிர்வகிக்க போகிறார்- அமைச்சர் மூர்த்தி

இன்னும் 2 மாதங்களில் உதயநிதி அமைச்சராக போகிறார். நேரு, இந்திரா காந்தி முதல் ஓபிஎஸ் வரை வாரிசு அரசியல் இருக்கிறது- அமைச்சர் மூர்த்தி

திமுக வேட்பாளரால் என் உயிருக்கு ஆபத்து.. வந்தவாசி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் மனு..

திமுக வேட்பாளரால் என் உயிருக்கு ஆபத்து என வந்தவாசி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் மீரான் மனு அளித்துள்ளார்

"என் கை, மண்வெட்டி பிடித்த கை; நான் மிகவும் கரடுமுரடானவன்" - ஈபிஎஸ் பேச்சு

கோவையில் சாக்கடை சுத்தம் செய்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரிய வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி

‛ஆயிரம் ரூபாய் என்னாச்சு...?’ கேள்வி எழுப்பிய தொண்டர்... ‛கொடுத்துடுவோம்... 4 வருசம் இருக்குல’ பதிலளித்த உதயநிதி!

குப்பைகளை அள்ளி வாக்குகளை ஸ்கோர் செய்த பாஜக வேட்பாளர்

‛75 சதவீதம் என்கிறார் ஸ்டாலின்... 50 சதவீதம் என்கிறார் உதயநிதி’ எத்தனை சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றியது திமுக?

”பணம் வரும், போகும் ஆனால் தேர்தல் முக்கியம்” - MR.ராதா வசனத்தை குறிப்பிட்டு PTR பரப்புரை

நாகர்கோவிலில் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார் கே.எஸ் அழகிரி

யாரையும் மதிக்க தெரியாத குணம் படைத்த மோடி காங்கிரஸ் மீது வசை பாடி வருகிறார் அவரது குற்றச்சாட்டுகள் பொய்யானவை இது கண்டிக்கத்தக்கது - கே.எஸ்.அழகிரி

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை

சமூகவலைதளங்களில் விதிமுறைகளை பின்பற்றாமல் பிரச்சாரம் செய்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை 

ஆடைகளுக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்த கடலூர் திமுக வேட்பாளர்

 கடலூர் மாநகராட்சியில் 13 வது வார்டில் திமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் எஸ் பி நடராஜன், இஸ்திரி கடைக்குச்சென்று கடையில் இருந்த ஆடைகளுக்கு இஸ்திரி செய்து  வித்தியாசமான முறையில் திமுக விற்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்

மதுரையில் வேட்பாளர்களை ஆதரித்து நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம்

மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்து வருகிறார் அதில் பணம் இன்று வரும் நாளை போகும் என்று பேசி உள்ளார் 

திருச்சி : கரும்புச்சாறு பிழிந்து கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்த வேட்பாளர்.

திருச்சி மாநகராட்சி 53 வது வார்டில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் இளைஞர் அணி நகர செயலாளர் ஜி.ஆர்.சிவா, மனைவி கற்பகவள்ளி போட்டியிடுகிறார். ஒரு ஜூஸ் கடைக்கு சென்று அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கரும்புச்சாறு பிழிந்து கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

திருச்சி : கரும்புச்சாறு பிழிந்து கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்த வேட்பாளர்.

திருச்சி மாநகராட்சி 53 வது வார்டில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் இளைஞர் அணி நகர செயலாளர் ஜி.ஆர்.சிவா, மனைவி கற்பகவள்ளி போட்டியிடுகிறார். ஒரு ஜூஸ் கடைக்கு சென்று அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கரும்புச்சாறு பிழிந்து கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

குப்பைகளை நகராட்சி வண்டியில் சேகரிக்கும் பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் காய்கறி வியாபாரம் செய்தும் வீதியில் இருந்த குப்பைகளை நகராட்சி வண்டியில் சேகரித்தும் நூதனமான முறையில் வாக்குகளை சேகரித்து வருகிறார்.



குப்பைகளை நகராட்சி வண்டியில் சேகரிக்கும் பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் காய்கறி வியாபாரம் செய்தும் வீதியில் இருந்த குப்பைகளை நகராட்சி வண்டியில் சேகரித்தும் நூதனமான முறையில் வாக்குகளை சேகரித்து வருகிறார்.



டீ போட்டுக் கொடுத்து ஆதரவு திரட்டிய வேட்பாளர்

சேலம் மாநகராட்சி 13-வது கோட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜ் குமார் அப்பகுதிக்கு உட்பட்ட திருநகர் டி.வி.எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். மேலும், மக்களை கவரும் விதமாக டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து ஆதரவு திரட்டினார்.



கரூரில் 246 இடங்களுக்கு 938 வேட்பாளர்கள் போட்டி

கரூர் நகர்புற ஊராட்சி மன்றத் தேர்தலில் மொத்த காலிப்பணியிடங்கள் 246 - தற்போது வரை 5 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் வருகின்ற 19.02. 2022 அன்று தேர்தலில் 938 நபர்கள் களம் காண்கின்றனர்.

திருவண்ணாமலை : நகர்ப்புறத் உள்ளாட்சி தேர்தல் - பதற்றமான 67 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சி, 5 பேரூராட்சிகளில் 153 பதவிகளுக்கு 768 பேர் போட்டி

கன்னியாகுமரியை நம்பித்தான் பாஜக தனித்து போட்டியிடுகிறது - அண்ணாமலை

கடலூரில் 10 பேர் போட்டியின்றி தேர்வு; 447 இடங்களுக்கு 1994 வேட்பாளர்கள் போட்டி

தஞ்சை மாநகராட்சியில் 282 பேர்; கும்பகோணம் மாநகராட்சியில் 275 பேர் போட்டி

தரங்கம்பாடி பேரூராட்சியில் 2 அதிமுக வேட்பாளர் உட்பட 3 பேர் போட்டியின்றி தேர்வு

தமிழக அரசின் பொங்கல் பரிசை காண்பித்து பரப்புரை செய்யும் அதிமுக வேட்பாளர்

கடலூர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : 10 பேர் போட்டியின்றித் தேர்வு.. களத்தில் 1994 வேட்பாளர்கள்..

கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 447 இடங்களுக்கு 1994 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், 10 பேர் போட்டி இன்றி தேர்வு

"எந்த கட்சியுடனும், கூட்டணியோ ஆதரவோ இல்லாமல்” - விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்ட அறிக்கை..

"எந்த கட்சியுடனும், கூட்டணியோ ஆதரவோ இல்லாமல் மக்கள் இயக்க வெற்றிக்காக இயக்கத்தவர்கள் உழைக்க வேண்டும்” - விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்ட அறிக்கை..

நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 397 பதவிகளுக்கு களம்காணும் 1790 வேட்பாளர்கள்..

நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 397 பதவிகளுக்கு களம்காணும் 1790 வேட்பாளர்கள்..

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் நடைபெறவிருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ரத்து

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் நடைபெறவிருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ரத்து. திங்கள் கிழமை  நள்ளிரவில் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தேர்தல் விதிமுறை மீறல் காரணத்தால் ரத்தானது

சேலம் மாவட்டத்தில் 695 கவுன்சிலர் பதவிகளுக்கு களம்காணும் 3,206 வேட்பாளர்கள்.. விவரம்..

"மக்கள் மீது அச்சம் , நேரிடையாக முதல்வர் பிரச்சாரம் செய்யவில்லை” - காஞ்சியில் ஓபிஎஸ் பேச்சு

"மக்கள் மீது அச்சம் , நேரிடையாக முதல்வர் பிரச்சாரம் செய்யவில்லை” - காஞ்சியில் ஓபிஎஸ் பேச்சு

குடும்பத்தோடு அரசியலா! என அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது விமர்சனம் எழுந்த நிலையில் வேட்புமனுவை வாபஸ் பெற்றார் அவரது மனைவி

குடும்ப அரசியலா! குடும்பத்தோடு அரசியலா! என அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது விமர்சனம் எழுந்த நிலையில் மனைவி சைதனி பீ மஸ்தான் வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொண்டார். 

விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சி, 7 பேரூராட்சிகளில் 210 பதவிகளுக்கு 935 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சி, 7 பேரூராட்சிகளில் 210 பதவிகளுக்கு 935 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் 398 வார்டு பதவிகளுக்கு 1926 பேர் போட்டி..

திருச்சி மாவட்டத்தில் 398 வார்டு பதவிகளுக்கு 1926 பேர் போட்டி..

கோவை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3366 பேர் போட்டி ; 9 பேர் போட்டியின்றி தேர்வு..!

கோவை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3366 பேர் போட்டி ; 9 பேர் போட்டியின்றி தேர்வு..!

கோவை மாவட்டம் பெரிய நெகமம் பேரூராட்சியில் 8 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

கோவை மாவட்டம் பெரிய நெகமம் பேரூராட்சியில் 8 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு. மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 8 திமுக வேட்பாளர்கள் பெரும்பான்மை பலத்துடன் போட்டியின்றி தேர்வு. கோவை மாவட்டத்தில் வேறு எந்த பேரூராட்சியிலும் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை விவரம்.

இடைக்கழிநாடு பேரூராட்சியில் உள்ள 21வார்டுகளுக்கு 119வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள 15வார்டுகளுக்கு 71வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சியில்,70 வார்டுகளில், 834 வேட்பு தாக்கல் செய்தனர். மறைமலைநகர்  நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு 151வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்

கடலூர் மாவட்டத்தில் 10 பேர் போட்டியின்றி தேர்வு

வடலூர் நகராட்சியில் 2 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு. கிள்ளை பேரூராட்சியில் 2 இடங்கள், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, மங்கலம்பேட்டை, பெண்ணாடம், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் தலா ஒரு இடங்களில் போட்டியின்றி தேர்வு.

‛தனி’ வார்டிற்கு எதிர்ப்பு: மனுதாக்கல் செய்த ஒரே வேட்பாளரும் கடைசியில் வாபஸ்... முதல் தேர்தல் ரத்தை சந்திக்கும் சிவகங்கை!

எட்டு மாதங்களாக எங்கு பதுங்கியிருந்தார் பழனிசாமி? - முதலமைச்சர் ஸ்டாலின்..

கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை நடக்கவிட்ட பழனிசாமிக்குக் கழக ஆட்சியைக் குறை கூற அருகதை இல்லை.


எட்டு மாதங்களாக எங்குப் பதுங்கியிருந்தார் பழனிசாமி?


தமிழ்நாட்டுக்கும் சேலம் மாவட்டத்துக்கும் கழக அரசு ஆற்றிய சாதனைகளைப் பட்டியலிட்டு சேலம் பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் கேள்வி.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - நடத்தை விதி மீறல் | 30.2.2022 முதல் 4.02.2022 வரை ரூ.4,90,75,798 மதிப்பிலான பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - நடத்தை விதி மீறல் |   30.2.2022 முதல் 4.02.2022 வரை ரூ.4,90,75,798 மதிப்பிலான பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

சேலத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் பிரச்சாரம்

சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் மேற்கொண்டு வருகிறார்.

பிரச்சாரத்துக்கு முன்பாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தலை ஒட்டி காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



இதற்கு முன்பாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை துவங்குகிறார்.

உடற்பயிற்சி கூடத்திற்கு போவதை பார்க்கவா மக்கள் வாக்களித்தனர்-எடப்பாடி பழனிச்சாமி கடுகடு

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை போட்டியிட நிர்ப்பந்தம் செய்ததா திமுக?

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை போட்டியிட நிர்ப்பந்தம் செய்த திமுக


 12 வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், 
அக்கட்சி சார்பில் போட்டியிடும் பரமசிவம் என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 


உதய சூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என பரமசிவத்திடம் திமுகவினர் பேரம் பேசியதாக புகார்


பரமசிவம் ஏற்க மறுத்ததால் உதயசூரியன் சின்னத்தில் அன்பரசு என்பவரை திமுக களமிறக்கியுள்ளதாக தகவல்.

ஒரே சைக்கிள்... ஒரே துடைப்பம்... ஒரே குப்பை... ஒரே வேட்பாளர்... ஒரே வாக்காளர்... இப்படியும் பிரச்சாரம்



ஈபிஎஸ் பரப்புரை செய்து கொண்டிருக்கும் போதே மனுவை வாபஸ் பெற்ற அதிமுக வேட்பாளர்

குப்பைகளை அள்ளி நூதன முறையில் வாக்கு சேகரிப்பு..

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 23 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் எ.டி. மணி என்ற தவமணி சாலையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு குப்பைகளை அள்ளி நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

திமுகவின் மேயர் வேட்பாளராக கருதப்படும் ஜெகன் மிரட்டி வாபஸ் பெற வைத்தார் - நாம் தமிழர் கட்சியினர் குற்றச்சாட்டு

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மாடசாமியை, திமுகவின் மேயர் வேட்பாளராக கருதப்படும் ஜெகன் மிரட்டி வாபஸ் பெற வைத்ததாக நாம் தமிழர் கட்சியினர் பேட்டி

தலைமையிடம் இருந்து படிவம் வாங்க முடியாமல் போனது.. தேனியில் ஒரு கலகல செய்தி

சிவசேனா கட்சியின் தேசிய தலைமை அறிவுறுத்தலின்படி, நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சிவசேனா கட்சி சார்பாக வேட்பாளர்களை களமிறக்க முடியவில்லை. மேலும் தேர்தல் ஆணையம் போதிய கால அவகாசம் கொடுக்காததால், கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து 'ஏ' மற்றும் 'பி' படிவம் கிடைப்பதில் தேர்தல் விதிமுறையின் படி சிக்கல் ஏற்பட்டது. எனவே தேசிய தலைமை அறிவுறுத்தலின் படியும், தமிழகத்தின் மாநில பொறுப்பாளர்    அறிவுறுத்தலின் படியும். சிவசேனா கட்சி போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என சிவசேனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேனி மாவட்டத்தில் போட்டியின்றி வெற்றி பெற்ற 4 வேட்பாளர்கள்..

தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு, இன்று இறுதி கட்டமாக வேட்பு மனு திரும்பி பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்ட கடைசி நாளில் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு சில வார்டுகளில், போட்டியின்றி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் போட்டியின்றி வெற்றி பெற்ற 4 வேட்பாளர்கள்..

தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு, இன்று இறுதி கட்டமாக வேட்பு மனு திரும்பி பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்ட கடைசி நாளில் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு சில வார்டுகளில், போட்டியின்றி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாநகராட்சி 22வது வார்டு திமுக வேட்பாளர் பிரேமா போட்டியின்றி தேர்வு.

எதிர்த்துப் போட்டியிட்ட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவினை வாபஸ் பெற்றதால் திமுக வேட்பாளர் பிரேமா போட்டியின்றி தேர்வு.

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு... வாகனம் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற திமுக வேட்பாளர் மனைவி... நொந்தவாசியான வந்தவாசி!

வந்தவாசி: திமுகவிற்கு ஒதுக்கிய வார்டை திடீரென காங்கிரஸிற்கு ஒதுக்கியதால் வேட்பாளர் சாலை மறியல்

வந்தவாசி - திமுகவிற்கு ஒதுக்கிய வார்டை திடீரென காங்கிரஸிற்கு ஒதுக்கியதால் வேட்பாளர் அவரது ஆதரவாளர்களுடன் சாலை மறியல் செய்தார். வேட்பாளரின் மனைவி சாலையில் சென்றுகொண்டு இருந்த வாகனத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு.

அதிமுக, நாம் தமிழர் வாபஸ்... சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் போட்டியின்றி திமுக வெற்றி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு தேர்தல் பிப்.19-ம் தேதி நடக்க உள்ளது.  திமுக,அதிமுக,பாஜக, நாம் தமிழர்,சுயேச்சை உள்ளிட்ட 74 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 72 வேட்பு  மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது  வேட்பு மனு வாபஸ் பெறும் நாளான இன்று 1-வது வார்டில் வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக, நாம்தமிழர் கட்சியினர் வேட்பு மனுவை  வாபஸ் பெற்றனர்.


இதனால்  திமுக சார்பில் 1-வது வார்டில் வேட்பு மனு செய்த வேட்பாளர்  அம்பலமுத்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி ஜான் முகமது மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் மாணிக்கவாசகம் அய்யனார் ஆகியோர் அறிவிப்பு செய்தனர்.

திருச்சி : வேட்பாளராக அறிவிக்க வெல்லமண்டி நடராஜன் 5 லட்சம் லஞ்சம் கேட்டார் - அதிமுக வட்டச்செயலாளர் புகார்

திருச்சி மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு ரூபாய் 5 லட்சம் பேரம் பேசிய முன்னால் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் , அதிமுக வட்ட செயலாளர் பழனிச்சாமி குற்றச்சாட்டு.

வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு

உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு

திருச்சி: த.மா.க வேட்பாளருக்கு எதிராக 51-வது வார்டில் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வட்டச்செயலாளர் மகள்

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளுக்கும் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்து அதற்கான வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க  வெளியிட்டது. அந்த பட்டியலில் திருச்சி மாநகராட்சி 51 வது வார்டில் அ.தி.மு.க சார்பில் அ.தி.மு.க வட்ட செயலாளர் எம்.பழனிச்சாமி மகள் திவ்யா என்பர் போட்டியிடுவார் என அ.தி.மு.க தலைமை கழகம் பட்டியல் வெளியிட்டது.


  இந்நிலையில் வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 51-வது வார்டில்  அ.தி.மு.க வேட்பாளர் திவ்யாவிற்கு பதிலாக இரட்டை இலை சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செங்கேணி என்பவர் போட்டியிடுவார் என திடீரென அறிவித்தது. 


இதில் மனமுடைந்து போன திவ்யா த.மா.க வேட்பாளருக்கு எதிராக 51 வது வார்டில் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

"அப்பனே விநாயகா எப்புடியாவது தாமரைய மலர வச்சுடுப்பா" - மயிலாடுதுறையில் பாஜக வேட்பாளர்கள் பிரார்த்தனை

நகராட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தாமரை மலர் மாலை அணிவித்து விநாயகரிடம் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் பாஜக வேட்பாளர்கள்.

சுயேச்சையாக போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வேட்புமனுக்களை வாபஸ் பெறவேண்டும் - கே.என் நேரு

சுயேச்சையாக போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வேட்புமனுக்களை வாபஸ் பெறவேண்டும். அனைவரும் அறிவிக்கப்பட்ட வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபட வேண்டும்


- சேலம் மாநகராட்சி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கே.என.நேரு பேச்சு

நெல்லை : அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேச்சு

நெல்லை : அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேச்சு. நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பொய்யான தகவலை சொல்லி திமுக ஆட்சுக்கு வந்துள்ளது என விமர்சித்தார்


 

‛ஓடி ஒளியப் போவதில்லை... பிரச்சனை என்றால் ஓடோடி வருவேன்’ - மேடையில் கர்ஜித்த ராஜேந்திர பாலாஜி!

அந்தமானில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அந்தமான் மாநிலத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 6.03.2022 அன்று நடைபெறுகிறது. அந்தமானில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா தனது வேட்பு மனுவை இன்று வாபஸ் பெற்றார்.

நெல்லை மாநகராட்சியின் 3 வது வார்டில் கட்சி அறிவித்த திமுக வேட்பாளர் பூ.சுப்பிரமணியனுக்கு போட்டியாக திமுக வேட்பாளர் என வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா தனது வேட்பு மனுவை இன்று வாபஸ் பெற்றார்.

காத்திருந்த மாஜி அமைச்சர்... காலை வாரிய வேட்பாளர்... வாடிப்பட்டி வாபஸ் கதை! -

மயிலாடுதுறை : தாமரை மாலை அணிந்தபடி பொதுமக்களுக்கு தாமரை மலரினை கொடுத்து வாக்கு சேகரிப்பு!

மயிலாடுதுறை நகராட்சி 16 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தாமரை மாலை அணிந்தபடி பொதுமக்களுக்கு தாமரை மலரினை கொடுத்து வாக்கு சேகரிப்பு!

விநோத முறையில் வாக்கு சேகரிக்கும் சுயேச்சை வேட்பாளர்

தேர்தலில் நின்றால் ஈனம் - மானம் பார்க்கக் கூடாது - அமைச்சர் அட்வைஸ்

இறுதிக் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு

  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதிக் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. 

வேட்புமனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாள்

திருவாரூரில் 1,263 வேட்புமனுக்கள் ஏற்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு திருவாரூர் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,418 வேட்பு மனுக்களில் 155 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 1,263 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அரசு பொறுப்புகள் வழங்கப்படும்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு 32 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய செந்தில்பாலாஜி, ”மாநகராட்சி தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் விரக்தியில் இருப்பார்கள். ஆனால் தேர்தல் முடிந்ததும் அவர்களுக்கு அரசுப் பொறுப்புகள் வழங்கப்படும். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் தொகுதிகளை இழந்ததை போல் நடக்காமல் தடுக்க பகுதி செயலாளர்கள் தங்களது பூத்களை பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு தோழமை கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்” என தெரிவித்தார்

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 475 வேட்புமனு ஏற்பு

480 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இன்று  பரிசீலனை நடைபெற்ற நிலையில் 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 475 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ பேட்டி

வேலூர் : 8-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுனில்குமார் போட்டியின்றி தேர்வு

வேலூர் மாநகராட்சி மண்டலம் ஒன்றுக்குட்பட்ட காட்பாடி பகுதி 8-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுனில்குமார் போட்டியின்றி தேர்வு. மொத்தம் 6 பேர் மனுத்தாக்கல் செய்த நிலையில் 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. சுனில் குமாரின் மனு மட்டும் ஏற்கப்பட்டது. 


அதிமுக, பா.ம.க, பா.ஜ.க  உட்பட்ட 6 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 5 பேரின் மனுக்களும் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் : 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 838 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன

மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில்  4 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 286 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.


சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில்  3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 147 மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன.


குத்தாலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 118 மனுக்களும், 


மணல்மேடு பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு  2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 101 மனுக்களும், 


தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கும்  105 வேட்புமனுக்கள், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 81 வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது .

‛21 வயது பூர்த்தியாகவில்லை...’ சேலம் நாம் தமிழர் வேட்பாளர் மனு தள்ளுபடி! -

கடைசி நிமிடத்தில் அட்மிட் ஆன பாஜக வேட்பாளர்...

கடைசி நிமிடத்தில் அட்மிட் ஆன பாஜக வேட்பாளர்... முன்மொழிபவரும் எஸ்கேப்... வேட்புமனுவோடு திரும்பிய வழக்கறிஞர்! 





கரூரில் பாஜக பெண் வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பு : காரணம் என்ன?

கரூரில் பாஜக பெண் வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பு - 4000 ரூபாய் டெபாசிட் தொகை செலுத்துவதற்கு பதிலாக 2000 ரூபாய் செலுத்தி இருந்ததால் நிராகரிப்பு 

உள்ளாட்சி தேர்தலில் 74 ஆயிரத்து 416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் 74 ஆயிரத்து 416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

கரூர் : அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் பிரச்சாரம்

கோடாங்கிபட்டியில் பட்டாள் அம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தபிறகு அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் பிரச்சாரம் மேற்கொண்டார்.


அப்போது பொதுமக்களிடம் பேசுகையில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தில் 500 கோடி ஊழல் செய்த திமுக அரசுக்கு உங்கள் வாக்கு என்ற பல்வேறு குற்றச்சாட்டுடன் பேசிய போது ஒரே நாடு ஒரே தேர்தல் அடிப்படையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும் மீண்டும் எடப்பாடி யார் தலைமையில் அம்மா ஆட்சி வெற்றி பெறும் என தெரிவித்தார்.

15வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரோசினிக்கு ஆதரவாக அவரது மகன் கல்யாண கோலத்தில் வாக்கு சேகரிப்பு

நெல்லை மாவட்டம்வள்ளியூர் பேரூராட்சியில்   15வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரோசினிக்கு ஆதரவாக அவரது மகன் இன்று  திருமணம் முடிந்த கையோடு மணமக்களோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்

சேலம் : அஸ்தம்பட்டி மண்டலத்தில் 14-வது வார்டு அதிமுக வேட்பாளர் நடேசன் என்பவரின் வேட்பு மனு நிராகரிப்பு.. காரணம் என்ன?

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்தில்14 வது வார்டு அதிமுக வேட்பாளர் நடேசன் என்பவரின்  வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.


காரணம்: மனைவி பெயரில் வரி பாக்கி ரூ. 2,326

சேலம் : நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த பெண் வேட்பாளரின் மனு நிராகரிப்பு.

சேலம்  மாநகராட்சி  5 ஆவது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் காவியா  என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் 21 வயது பூர்த்தியாகததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் 49 வார்டு அதிமுக வேட்பாளர் சுமதி ஜீவானந்தம், மாற்று வேட்பாளரான ஜீவானந்தம் ஆகிய இருவரின் வேட்புமனு நிறுத்திவைப்பு.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் 49 வார்டு அதிமுக வேட்பாளர் சுமதி ஜீவானந்தம், மாற்று வேட்பாளரான ஜீவானந்தம் ஆகிய இருவரின் வேட்புமனு நிறுத்திவைப்பு.



ஏற்கனவே சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், காஞ்சிபுரம் ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், மீண்டும் நகர்ப்புற தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.


குறுகிய காலத்தில் ஊரக பகுதியில் இருந்து, நகர் பகுதிக்கு வாக்காளர் பெயர் மாற்றப்பட்டுள்ளது , இது தொடர்பாக பிற வேட்பாளர்கள் கேள்வி எழுப்பியது தொடர்ந்து, வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : சிவகங்கையில் வேட்பாளராக களம் இறங்கும் 22 வயது பெண்

சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பட்டதாரி இளம்பெண் பிரியங்கா டெக்னாலஜியை பயன்படுத்தி வார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வேன் என தெரிவித்துள்ளார் .





நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : 73,000 பேர் வேட்புமனு தாக்கல்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுதாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலில் போட்டியிட மொத்தம் 73,000 த்திற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : நாளை முதல் முதல்வர் காணொலி மூலமாக பிரச்சாரம்

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணித் தலைவர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நாளை முதல் காணொலி மூலமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

Background

TN Urban Local Body Election News LIVE: 


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : தமிழ்நாடு முழுவதும் இன்று வேட்புமனு மீது பரிசீலனை செய்யப்பட இருக்கிறது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.