பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களைதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Continues below advertisement

கரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Continues below advertisement

 


 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை கலைதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் மாவட்டத் தலைவர் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது. இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் பள்ளி கல்வித்துறை ஆணையர் பணியிடத்தின் ரத்து செய்து பழைய நிலையில் ஆன பதவி உயர்வு வழி பள்ளி கல்வி இயக்குனர் பணியிடம் தொடர்பு சிதற வேண்டும் மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்தும் நோக்கோடு உயர்கல்வி படித்த பின் அனுமதிக்காக காத்திருக்கும் 6500 ஆசிரியர்களுக்கு பின்னேர்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

வரும் 28 ஆம் தேதி சென்னை கோட்டையை நோக்கி மாபெரும் பேரணி நடைபெறுவதை முன்னிட்டு கரூரில் மின்வாரிய தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 


 

மின்வாரிய ஊழியர்கள் வருகின்ற 28-ம் தேதி சென்னையில் நோக்கி மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளதால், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு குழு சார்பில் ஆயுத்த விளக்க கூட்டம் பால்ராஜ் - AlCCTU கரூர் வட்ட கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் தலைமையில் கரூர்- கோவை நெடுஞ்சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை அறிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

 


 

இதில் காலி பணியிடங்களை நிரப்புக, நிரந்தர தன்மை வாய்ந்த பதவிகளை அவுட் அவுட்சோர்சிங்கிற்கு விடதே, ஊழியர்களின் 23 சலுகைகளை பறித்திடும் அரசானையை ரத்து செய்க,மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்கி வரும் ஊதிய உயர்வு மற்றும் பண பயன்களை நிலுவைத் தொகையுடன் வழங்கிடுக, பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்து என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுருத்தி தமிழக அரசு எதிராக கண்டன முழக்கமிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கு மேற்பட்ட மின் வாரிய ஊழியர்கள் அரசுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola