Breaking LIVE | இந்தியாவில் முதன்முறையாக தற்பாலின ஈர்ப்பாளரான வக்கீல் நீதிபதியாக பதவி உயர்வுக்கு பரிந்துரை

இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள்..

ABP NADU Last Updated: 15 Nov 2021 11:53 PM
இந்தியாவில் முதன்முறையாக தற்பாலின ஈர்ப்பாளரான வக்கீல் நீதிபதியாக பதவி உயர்வுக்கு பரிந்துரை

இந்தியாவில் முதன்முறையாக தற்பாலின ஈர்ப்பாளரான வக்கீல் நீதிபதியாக பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி வகிக்கும் என்.வி ரமணா தலைமையில், இருக்கும் உச்சநீதிமன்ற கொலிஜியம் மூத்த வழக்கறிஞரான செளரப் கிர்பால் என்பவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்த பரிந்துரை செய்துள்ளது. இவர் தன்னை தன்பாலீர்ப்பாளராக அடையாளப்படுத்திக்கொண்டவர். பரிந்துரையின்படி இவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால், இவர்தான் இந்தியாவில் முதல் தன்பாலீர்ப்பு உயர்நீதிமன்ற நீதிபதியாவார்.

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு டிச.13ம் தேதி தொடங்கும் - அண்ணா பல்கலைக்கழகம்


தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நவ.19ம் தேதி உள்ளூர் விடுமுறை


இரவு நேரத்தில் உடற்கூராய்வு செய்ய அனுமதி - மத்திய அரசு


நாகை மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பதற்கான அறிவிப்பை திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு


மாணவி தற்கொலை : ஆய்ந்து அறிக்கை தருமாறு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு

கோவை மாணவி தற்கொலை விவகாரம் : முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தர உத்தரவு

கோவை மாணவி தற்கொலை விவகாரம் : முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தர தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படவில்லை - தமிழ்நாடு அரசு

நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை திரும்ப பெறுவதாக தமிழ்நாட்டு அரசு அறிவிப்பு. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இத்திட்டம் வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Background

இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள்..

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.