Tamil News Headlines Today:
கொரோனா மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான உயர்நிலை ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மத்திய அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கௌபா தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. நாட்டின் ஒரு சில பகுதிகளில் நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டார். பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்காக மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்குமாறும் தெரிவித்தார்.
பிரபல கல்வி நிறுவனமான ஜேப்பியார் கல்வி குழுமங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.2000 கோடி மதிப்புள்ள 91 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.
Babul Supriyo Joins TMC: திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் பாஜக எம்பி பாபுல் சுப்ரியோ!
தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்கள் அனைத்தும் விரைவில் மீட்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர் என் ரவி நேற்று பதவி எற்றுக் கொண்டார்.
தமிழகம் முழுவதும் இன்று 20-ஆயிரம் சிறப்பு முகாம்கள் மூலம் 15 லட்சம் கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதலமைச்சர் பதவியை கேப்டன் அம்ரிந்தர் சிங் ராஜினாமா செய்தார். பதவி விலகல் கடிதத்தை அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்திடம் அளித்தார். பின்பு செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், " காங்கிரஸ் கட்சியில் நான் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டேன். அடுத்தகட்டமாக என்ன செய்வதென்று எனது ஆதரவாளர்களிடம் பேசி முடிவு செய்வேன்" என்று தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சராக உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த எல்.முருகன், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு வேட்பாளராக முருகனை அறிவித்தது பாஜக தலைமை.
வருமான வரித்துறையினர் தில்லி, மும்பை, ஜெய்பூர்,கான்பூர் உள்ளிட்ட 28 இடங்களில் இன்று சோதனை மேற்கொண்டனர். மும்பையில் நடிகர் சோனு சூட்-க்கு சொந்தமான இடங்களில் வரி ஏய்ப்பு தொடர்பாக சோதனை நடைபெற்றது.
Sonu Sood | ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்த அருந்ததி வில்லன் சோனு சூட்.. ஐடி தகவல்!
முன்னாள் மத்திய அமைச்சர் திபாபுல் சுப்ரியோ, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.