• Udhayanidhi Sanadhan Dharma: ”சாமி கும்பிடக்கூடாது என சொல்லவில்லை” - சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி விளக்கம்


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் “சாமி கும்பிடக் கூடாது என நாங்கள் சொல்லவே இல்லை. அது அவரவர் விருப்பம். சாதி அடிப்படையினறி அனைத்து தரப்பினரையும் முன்பு கோயிலில் அனுமதித்து கொண்டிருந்தீர்களா? திமுக தான் சட்டப்போராட்டம் நடத்தியது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என முன்பு அனுமதித்தீர்களா? அந்த உரிமையை பெற்றுக் கொடுத்தது திமுக தான். அதன் தலைவர் கருணாநிதி தான். மேலும் படிக்க 



  • TN Rain Alert: சில்லென மாறும் தமிழ்நாடு.. இன்று 8 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. எங்கெல்லாம்? நிலவரம் இதோ..


04.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பத்தூர்,  வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க 



  • DMK MP Meeting: 16 ஆம் தேதி கூடுகிறது திமுக எம்.பிக்கள் கூட்டம்.. மு.க. ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை..


செப்டெம்பர் 16 ஆம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் படிக்க 



  • EPS: நாளுக்கு நாள் சீர்குலையும் சட்டம் - ஒழுங்கு: பல்லடம் படுகொலைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!


தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து வருவதாக பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நிலத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை, போதை கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க 



  • CM M.K. Stalin Podcast: வாயால் வடை சுடும் பாஜக; இந்தியாவை காப்பாற்றப்போவது I.N.D.I.A - தான்: முதல் பாட்காஸ்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..


அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மத்தியில் ஆளும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்தான். வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்தியாவிற்காக பேச பாட்காஸ்ட் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை முதன்முதலில் தனது பாட்காஸ்ட் சிரீஸ் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க