- TN Assembly: அக்டோபர் 9ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை - சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும், கூட்டத்தொடர் எப்போதுவரை நடைபெறும் என்பது குறித்து சட்டமன்ற அலுவல் குழு முடிவு செய்யும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2023- 2024ஆம் நிதியாண்டிற்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- TN Rain Alert: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..
- CM MK Stalin: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: "வரவேற்கிறோம்.. தமிழ்நாட்டை வஞ்சிக்கமாட்டோம் என உறுதி தருக” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"மகளிர் உரிமைக்கு 75 ஆண்டு காலமாக பாடுபட்டு வரும் தி.மு.க., மகளிர் ஒதுக்கீட்டை அன்றும் வரவேற்றது; இன்றும் வரவேற்கிறது!" என்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பற்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்னிந்திய மக்களை ஆட்கொண்டுள்ள அச்சத்தைப் போக்கிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 9 ஆண்டுகளாக பாராமுகம் காட்டிவிட்டு தற்போது சட்டமியற்றுவது தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாகவும் பா.ஜ.க. மீது விமர்சனம் வைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். மேலும் படிக்க
- IT Raid: சென்னையில் தொழிலதிபர்களுக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை.. வருமானவரித்துறை அதிரடி..
சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் (CREW) அனல் மின் நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் ஆண்டுக்கு 800 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் கொண்ட திட்டங்களை கையாண்டு வருகிறது. 35 ஆண்டுகளில், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, ஒரிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளன. மேலும் படிக்க
- Minister Udhayanidhi Stalin : சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்துவிடுமா? : நம்புங்கள்.. ஒழிந்துவிடும்.. பதிலளித்த அமைச்சர் உதயநிதி