மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

20.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

 

21.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி,  கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

 

22.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் கரூர்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

 

23.09.2023 மற்றும் 24.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

 

25.09.2023 மற்றும் 26.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 7, திருப்பத்தூர் (சிவகங்கை), விருதுநகர் தலா 6, திருமானூர் (அரியலூர்), மொடக்குறிச்சி (ஈரோடு), குப்பணம்பட்டி (மதுரை), சிவகங்கை (சிவகங்கை), பூதலூர் (தஞ்சாவூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) தலா 5, கொடைக்கானல் (திண்டுக்கல்), சென்னிமலை (ஈரோடு), பேரையூர் (மதுரை), பரமத்திவேலூர் (நாமக்கல்), விராலிமலை (புதுக்கோட்டை), தம்மம்பட்டி (சேலம்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), கோவிலங்குளம் (விருதுநகர்), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்) தலா  4,  திண்டுக்கல், கரூர் பரமத்தி (கரூர்), பாலவிடுதி (கரூர்), உசிலம்பட்டி (மதுரை), மங்களபுரம் (நாமக்கல்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), நந்தியார் (திருச்சிராப்பள்ளி), துவாக்குடி (திருச்சிராப்பள்ளி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), திருச்சுழி (விருதுநகர்), சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), விருதுநகர் AWS  தலா  3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

 

வங்கக்கடல் பகுதிகள்:

 

20.09.2023 மற்றும் 21.09.2023: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

 

அரபிக்கடல் பகுதிகள்:
  

 

20.09.2023: லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.