மேடவாக்கத்தில் டிப்ளோமா மாணவியை, காதலிக்க வற்புறுத்திய வாலிபர் சரமாரியாக வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்மாணவியின் அம்மா பிரவீனாவுடன் வந்தபோது வாலிபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.
சென்னை மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வண்டலூரில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்காக டிப்ளமோ படிக்கும் மாணவி காத்திருந்தபோது ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த வசந்த் என்பவர், கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதில் டிப்ளமோ படிக்கும் கல்லூரி மாணவிக்கு தலை, தொடை, கைவிரல், முகத்தின் தாடை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ஒரு தலை காதலால் கத்தியால் குத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கரணை காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பிச் சென்ற இளைஞனை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 16 வயது பெண்ணுக்கு தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெண்கள் மற்றும் முதியவர்கள் அவசர காலங்களில் தங்களை பாதுகாத்துக்கொள்ள தமிழ்நாடு காவல் துறை தரப்பில் காவலன் SOS என்ற செயலியை அறிமுகம் செய்தது.
இந்த செயலி மூலம் புகார் அளிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தருவார்கள் என்பதால் இரவு நேரங்களில் அல்லது தனியாக செல்லும் பெண்கள் அனைவரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய கூகுள் ப்ளேஸ்டோரில் காவலன் SOS என்ற செயலியை தேட வேண்டும். தமிழ்நாடு அரசு முத்திரையுடன் இருக்கும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆடியோ மற்றும் வீடியோ ரெக்கார்டிங் தேவை என்பதால் அதற்கு அனுமதி வழங்க வேண்டும். தமிழ் / ஆங்கிலம் என இரு மொழிகளும் இருப்பதால் தங்களுக்கு வசதியான மொழியினை தேர்வு செய்ய வேண்டும். பின் தனிநபரின் தொலைப்பேசி எண், பெயர் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும். இப்படி அனைத்து விவரங்களை பதிவிட்ட பின் நீங்கள் எப்போது ஆபத்தில் இருப்பதாக உணர்கிறீர்களோ அந்த நேரத்தில் இந்த ஆப்பை ஓபன் செய்து நடுவில் சிவப்பு வண்ணத்தில் இருக்கும் `SOS' என்ற ஆப்ஷனைத் தேர்வுசெய்தால் போதும்.
அதற்கு பின் தொலைப்பேசியில் இருக்கு ஜிபிஎஸ் ட்ராக் செய்யப்படும் மேலும் மொபைல் போனில் இருக்கும் கேமிரா தானாகவே செயல்படத்தொடங்கி காவல்துறையினருக்கு அனுப்பும். அதனை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவார்கள்.
கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு ; காவல்துறையினர் விசாரணை