சென்னையில் இன்று காலை முதல் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். துரைப்பாக்கம், பள்ளிக்கரனை, நீலாங்கரை, எண்ணூர், நாவலூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் (CREW) அனல் மின் நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் ஆண்டுக்கு 800 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் கொண்ட திட்டங்களை கையாண்டு வருகிறது. 35 ஆண்டுகளில், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, ஒரிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.