- AIADMK District Secretaries Meeting :செப்டம்பர் 4ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் செப்டம்பர் 4ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,” அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மேலும் படிக்க
- CM MK Stalin: மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளின் அரசை மத்தியில் அமைக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
2014-ஆம் ஆண்டு, 2019-ஆம் ஆண்டு என நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க. அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், இன்னும் 9 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க தனது வெற்றியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. மேலும் படிக்க
- Toll Gate Charges In Tamilnadu: தமிழகத்தில் நள்ளிரவு முதல் 28 சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்த கட்டண உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில ஒவ்வொரு ஆண்டும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதில், முதன்மையாக உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் மாதமும், அதன்பிறகு மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படும்,. அந்த வகையில், தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி, சமயபுரம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, உளுந்தூர்பேட்டை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் கட்டணம் உயர்ந்துள்ளது. மேலும் படிக்க
- TN Rain Alert: இன்று 15 மாவட்டங்களிலும் நாளை 9 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க
- EPS Statement: தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கவேண்டும்.. எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும், போதைப்பொருள் நடமாட்டததையும் தடுக்க திறைமையான காவல் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “ பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்' என்னும் முதுமொழியை மெய்ப்பிக்கும் வகையில், இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழகம் புதைகுழிக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு பல குற்ற நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். யார் ஆட்சியில் இருந்தாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக பிரச்சனைகள் ஏற்படுவதும், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதும் இயல்பு. மேலும் படிக்க