• மாதந்தோறும் 15-ஆம் தேதி.. மகளிர் உரிமைத் தொகை குறித்து வெளியான முக்கிய தகவல்..!


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் 15 ஆம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என  தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் பெரிதும் எதிர்பார்த்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இனி தகுதியுள்ள மகளிருக்கு மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிதிச்சுமை உள்ளிட்ட பல காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது. மேலும் படிக்க



  • நிபா வைரஸ் எதிரொலி ; மாஹே பிராந்தியத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் 17-ஆம் தேதி வரை மூட உத்தரவு


புதுச்சேரியின் பிராந்தியமான மாஹே கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் ( Nipah Virus ) அதிகம் பாதித்த கோழிக்கோடு மாவட்டம் அருகே உள்ளது. ஆகவே அங்கிருந்து புதுச்சேரி மாநிலம் மாஹே பிராந்தியத்திற்கு நிபா வைரஸ் ( Nipah Virus ) பரவ வாய்ப்புள்ளது என்பதால் புதுச்சேரி அரசு  எல்லைகளை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. இதனிடையே மாஹே பிராந்தியத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். மேலும் படிக்க



கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் குடும்ப பெண்கள் பற்றி நெகிழ்ச்சியாக பேசியது, பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் தகுதியுள்ள 1 கோடியே 6 லட்சம் மகளிருக்கு இனி மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் ; OTP எண் கேட்கப்பட்டால் எவரும் பகிரவேண்டாம்... ஆட்சியர் அறிவுறுத்தல்


விழுப்புரம் : கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் வரப்பெற்ற குறுஞ்செய்தியினைத் தொடர்ந்து , கைப்பேசியில் OTP எண் கேட்கப்பட்டால் எவரும் பகிரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அறிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் (15.09.2023) துவங்கப்பட உள்ள நிலையில் இன்று முதல் ரூ.1000/- மகளிரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. உரிமைத் தொகையினை வங்கியிலிருந்து எடுப்பதற்கு உரிமைத் தொகை ATM கார்டு வழங்கப்பட உள்ளது. மேலும் படிக்க


அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? தீர்ப்பு ஒத்திவைப்பு


சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வரும் 20ஆம் தேதி, தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க