• சிங்கப்பூர் - மதுரை இடையே அதிக விமானங்கள் இயக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்..


டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தவும், சிங்கப்பூர்-மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்திடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர்  ஜோதி ராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் விமான சேவை கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்டது, அதன் பின் இந்த விமான சேவை தொடங்கப்படவில்லை. அதனை மீண்டும் தொடங்க வேண்டும் என முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் படிக்க



  • மல்யுத்த வீரர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா..? - அண்ணாமலை கேள்வி


டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா? என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.எல்லா குற்றத்திற்கும் ஆதாரம் வேண்டும். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது கைது செய்தால் தான் போராட்டத்தை நிறுத்துவோம் என்பது தவறு எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க




  • 'இன்னும் சில தினங்களில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு’ - அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!




தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதேபோல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டை தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை வழங்க கால தாமதம் ஏற்படும் என்பதால் மாணவ மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை மாநகர போக்குவரத்து கழக  நடத்துநர்களிடம் காண்பித்து பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  மேலும் படிக்க



  • மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தடையாகும் நிலை.. அங்கீகாரம் ரத்து.. அமைச்சர் கொடுத்த விளக்கம்


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், சுகாதார நலப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான செயலி அறிமுக விழா அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.  அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தடையாகும் என அரசியல் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாளை முதலமைச்சரை சந்தித்து இது தொடர்பாக ஆலோசிக்க உள்ளோம்.  என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க



  • மன நிறைவோடு திரும்புகிறேன்: ஜப்பான் பயணம் குறித்து தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்


சிங்கப்பூர், ஜப்பான் பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘தமிழ்நாட்டில் ஜனவரி 2024-இல் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு “வருக வருக” என அனைவரையும் அழைத்து,தமிழ்நாடு அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது" என்ற நம்பிக்கையை தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திய மனமகிழ்வுடன், வெற்றிகரமாக சென்னை திரும்புகிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க