• இந்திய - ஜப்பானிய உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் - ஜெட்ரோ அமைப்புக்கு முதலமைச்சர் வேண்டுகோள் 


தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை டோக்கியோவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (Japan External Trade Organization JETRO) தலைவர் இஷிகுரோ நோரிஹிகோயும் (Ishiguro Norihiko), செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோயும் (Kazuya Nakajo)  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்.அப்போது இந்தியா ஜப்பானிய கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் படிக்க



  • "படிப்பது ராமாயணம்.. இடிப்பது பெருமாள் கோவிலா..?" தி.மு.க. அரசை விளாசிய ஓ.பன்னீர்செல்வம்..! 


பத்திரிகையாளர்களுக்கான வீட்டு மனை பட்டாவினை திமுக அரசு ரத்து செய்ததற்கு ஒ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, மதுரை, மாவட்ட ஆட்சித் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட பட்டா ரத்து ஆணையை உடனடியாக திரும்பப் பெறவும், பத்திரிகையாளர் சங்கங்களின் வேண்டுகோளினை ஏற்று நிபந்தனைகளை தளர்த்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மேலும் படிக்க



  • தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!


தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி  ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • நிர்வாக திறன் அற்ற அரசால் 3 மருத்துவ கல்லூரிகளில் அங்கீகாரம் ரத்து - சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு 


விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபான விற்பனை, ஊழல் முறைகேடுகள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள், தமிழக அரசை கண்டித்து மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய  மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம்,  அமைச்சர் மஸ்தான் எந்த பணியையும் செய்யாமல் சாராயம் விற்கும் பணியை செய்வதாகவும், நிர்வாக திறன் அற்ற அரசால் மூன்று மருத்துவ கல்லூரிகளில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் படிக்க



  • கோவில்பட்டியில் 12வது அகில இந்திய ஹாக்கி போட்டி - நியூடெல்லி ஹாக்கி அணி சாம்பியன்


அகில இந்திய ஹாக்கி போட்டியில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணம் வழங்கப்பட்டது. மேலும் படிக்க