விழுப்புரம்: அமைச்சர் மஸ்தான் எந்த பணியையும் செய்யாமல் சாராயம் விற்கும் பணியை செய்வதாகவும், நிர்வாக திறன் அற்ற அரசால் மூன்று மருத்துவ கல்லூரிகளில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் குற்றஞ்சாட்டினார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபான விற்பனை, ஊழல் முறைகேடுகள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள், தமிழக அரசை கண்டித்து மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மேடையில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம், திமுக ஆட்சியில் எங்கும் ஊழல் எதிலையும் ஊழல் நிறைந்த ஆட்சியாகவும் நிர்வாக சீர்கேட்டினை கொண்ட ஆட்சியாகவும், தமிழகத்தில் ரவுடிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டினார்.
தமிழகத்தில் ஆள தெரியாத நிர்வாகத்தையும் பொதுமக்கள் குறித்து துளியும் கவலை படாமல் தன் குடும்பத்தை மட்டும் நினைத்து கவலைபடுகிற முதல்வராக உள்ள ஸ்டாலின் உள்ளதாகவும் தனது முதல்வர் பதவியை ஸ்டாலின் விலக வேண்டும் என்றும் திமுக பொறுப்பிலிருக்க்கும் அமைச்சர்கள் உதவியோடு கள்ளச்சாராய வியாபாராம் அமோகமாக நடைபெறுவதாகவும், திமுக அமைச்சரவையில் 23 ஊழல் குற்றச்சாட்டுள்ள அமைச்சர்கள் உள்ளதாகவும்,திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டாட்டு முடிந்த நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மஸ்தானுக்கு விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் செய்து உரிய விலை வாங்கி கொடுக்க முடியவில்லை எந்த பணியையும் செய்யாமல் சாராயம் விற்கும் பணியை அமைச்சர் மஸ்தான் செய்வதாகவும் மிகப்பெரிய சாராய வியாபாரியான மரூவூர் ராஜாவை திமுகவில் சேர்க்கபட்டு அவரது மனைவி கவுன்சிலராக தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
கள்ளச்சாராயம் கஞ்சா விற்பனையை தமிழகத்தில் தடுக்கவில்லை தமிழகத்தின் காவல் துறை தலைவர் சட்டஒழுங்கு பாதுகாப்பு பணியை சரி செய்யாமல் சைக்கிள் ஓட்டி கொண்டிருபதாகவும், ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது அவர் ஒரு பொம்மை என்றும் சாராய ஆலையிலிருந்து கலப்படமான மது விற்பனை செய்யப்பட்டு கரூர் கம்பெணி மூலம் ஸ்டாலின் குடும்பத்தாருக்கு செந்தில் பாலாஜி மூலமாக செல்வதாக குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் செயல்படும் 6 ஆயிரம் பார்களில் 2 ஆயிரம் பார்கள் லைசென்ஸ் இல்லாமல் செயல்படுவதாகவும் தமிழகத்தில் பாரம்பரியமிக்க ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, தர்மபுரி, திருச்சி போன்ற மூன்று மருத்துவ கல்லூரிகளில் அங்கீகாரம் ரத்து செய்யபட்டு 500 இடங்கள் சேர்க்கபடாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நிர்வாக திறன் அற்ற அரசால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
அதிகாரமற்ற பொம்மை முதல்வராக செயல்படும் ஸ்டாலினின் ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை திமுக அரசில் உள்ளதாக தெரிவித்தார். அதிமுக கூட்டத்தின் போது புதிய கட்டிடம் கட்டிக்கொண்டிருக்கும் கட்டிடத்திலிருந்து செங்கல் ஒன்று அதிமுக தொண்டர் தலையில் விழுந்து ரத்தம் வந்ததால் திமுகவினர் கல்லால் அடித்துவிட்டதாக அதிமுகவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.