தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்றது.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வந்த 12வது அகில இந்திய ஹாக்கி போட்டியில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி,  செகந்திரபாத், சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும் மோதின. இதில் 3 - 1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் கடந்த 18ந்தேதி முதல் 12வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து புகழ்பெற்ற 16 அணிகள் கலந்து கொண்டன. 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளும், காலியிறுதி, அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. இறுதி போட்டிக்கு நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும், செகந்திரபாத், சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும் தகுதி பெற்றன.




அகில இந்திய ஹாக்கி போட்டியில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும், செகந்திரபாத், சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும் மோதின. போட்டி தொடங்கியது முதல் இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடின. போட்டி தொடங்கிய 15வது நிமிடத்தில் நியூடெல்லி அணி தனது முதல் கோலை அடித்தது. 18வது நிமிடத்தில் செகந்திராபாத் அணி பதில் கோல் அடித்தது. இதையெடுத்து நியூடெல்லி அணி வீரர்கள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் ஆடி ஆட்டத்தின் 29, 48வது நிமிடத்தில் கோல்கள் அடித்தனர். இறுதியில் 3 - 1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.




முன்னதாக 3, 4 இடங்களுக்கான போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், நியூடெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும் மோதின. இதில் ஷீட் அவுட் முறையில் 5 - 4 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்றது.


இதையெடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அர்ஜீனா விருது பெற்ற இந்தியா ஹாக்கி அணி முன்னாள் வீரர் முகமது ரியாஸ், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரருமான கடம்பூர் ராஜூ, கே.ஆர் குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணம் வழங்கப்பட்டது.