- “வாழ்த்து சொல்லுங்க”.. இதுக்காக தான் சிங்கப்பூர் போறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் 9 நாள் அரசுமுறை பயணமாக சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்.தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. 2 நாட்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முதலமைச்சர், அதன்பின் மே 25 ஆம் தேதி ஜப்பான் செல்கிறார். அங்கு 6 நாட்கள் வரை அவர் தொழில்துறை சார்ந்த முக்கிய நபர்களை சந்திக்கிறார். மேலும் படிக்க
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வது இன்ப சுற்றுலா... எடப்பாடி பழனிசாமி அறிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அது இன்பச் சுற்றுலா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். குடும்பத்துடன் துபாய் இன்பச் சுற்றுலாவை மேற்கொண்ட விடியா அரசின் முதலமைச்சர் இப்போது, மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார் என அவர் விமர்சித்துள்ளார். மேலும் படிக்க
- வரும் உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் சென்னையில்தான்.. அப்டேட் கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் ஜூன் 13 முதல் 17 வரை உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடைபெற உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த தொடரானது சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடக்கிறது. ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டிக்கான டி-சர்ட் அறிமுகம் செய்து முதற்கட்டமாக ரூ.1.50 கோடியை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும் படிக்க
- அடுத்த 5 நாட்கள்.. தமிழ்நாட்டில் வெளுக்கப்போகுது மழை..
வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- இந்தப் பிரிவு மாணவர்கள் படிக்க ஒரு பைசா கூட செலுத்த வேண்டியதில்லை: உயர்நீதிமன்றம் அதிரடி..
அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மாணவர்கள் படிக்க ஒரு பைசாகூட செலுத்த வேண்டியதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் புத்தகம், சீருடை உள்ளிட்ட அனைத்துக்குமான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க