10ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த பெரம்பலூர்.. கடைசி இடம் இந்த மாவட்டமா?


சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் திட்டமிட்டபடி  10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். மேலும் வாசிக்க


TN 11th Result 2023: வெளியான பிளஸ் 1 தேர்வு முடிவுகள்; 90.93% மாணவ- மாணவிகள் தேர்ச்சி


மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியாகியுள்ளது. இதில் 90.93 %  மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் வாசிக்க


TN 10th Supplementary Exam: 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் எப்போது? முழு அட்டவணை இதோ!



10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது. ஜூலை 4ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. மேலும் வாசிக்க



CM Stalin : தூத்துக்குடி, சேலம், தஞ்சையில் மினி டைட்டல் பூங்கா...அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!


தூத்துக்குடி, சேலம், தஞ்சாவூர் அகிய மாவட்டங்களில் அமைய உள்ளது. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 92 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள மின் டைட்ல் பார்க் கட்டுமானப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் வாசிக்க


TN Rain Alert: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. வெயில் எப்படி இருக்கும்? இன்றைய வானிலை அப்டேட் இதோ..


வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


19.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


20.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் வாசிக்க