CM Stalin : தூத்துக்குடி, சேலம், தஞ்சாவூர் அகிய மாவட்டங்களில் அமைய உள்ள மின் டைட்டல் பார்க கட்டுமானப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.


தூத்துக்குடி, சேலம், தஞ்சாவூர் அகிய மாவட்டங்களில் அமைய உள்ளது. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 92 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள மின் டைட்ல் பார்க் கட்டுமானப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.


மேலும், காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்து, புதிய மினி டைடல் பூங்காக்களுக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின். காவல் துறை சார்பில் செங்கல்பட்டு, இராணிப் பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 36 கோடியே 39 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. காணொலி வாயிலாக கட்டடங்களை திறந்து வைத்து, 3,271 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். 


 






தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 92 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் சேலம் மாட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளது. அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின். 


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் 1859 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள புதிய துணை மின் நிலையங்கள், 143 கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவில் 65  துணை மின் நிலையங்களில் 853 எம்.வி.ஏ. அளவிற்கு திறன் மேம்படுத்தப்பட்ட மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் தொடங்கி வைத்தார் முதலமைச்சர். 
 
தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் அமைச்சர்கள் துரைமுருகன்,  கே.என்.நேரு, எ.வ.வேலு, டி.ஆர்.பி ராஜா, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ், டி.ஆர.பி ராஜா தலைமைச்செயலாளர் இறையன்பு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




மேலும் படிக்க


Engineering Counselling: ஒரு மாதம் முன்னதாகவே தொடங்கும் பொறியியல் கலந்தாய்வு; அமைச்சர் பொன்முடி திடீர் அறிவிப்பு