TN Headlines Today June 26:  



  • மகளிர் உரிமைத் தொகை - முதலமைச்சர் ஆலோசனை


மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதித்துறையும் வருவாய்த்துறை, சமூகநலத்துறை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மேலும் வாசிக்க.



  • ஆளுநர் ஒப்புதல் அளிக்காத 13 மசோதாக்கள்.


எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என மாநில அரசுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டிலும் இந்த பிரச்னை அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.


தமிழ்நாடு ஆளுநர் கூறியது என்ன..?


கடந்த மே மாதம் 4ஆம் தேதி, ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, "ஆளுநரிடம் எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை. பல்கலைக்கழகங்கள் தொடர்பான எட்டு மசோதாக்கள் மட்டும்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார். மேலும் வாசிக்க..



  • தக்காளி விலை உயர்வு


இரண்டு நாட்களில் தக்காளியின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கிலோ தக்களியின் விலை 40 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 100  முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் வாசிக்க..



  • பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்த கமல்ஹாசன்.


கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கார் பாரிசாக வழங்கினார். கமல் பண்பாட்டு மையம் சார்பாக அவருக்கு  Maruti Suzuki Ertiga காருக்கான முன்பணத்தை கமல்ஹாசன்  ஷர்மிளாவுக்கு வழங்கினார். வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவோராக ஷர்மிளா தனது பணியை தொடர உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார். ஷர்மிளா குறித்த சமீபத்திய விவாதத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாவும், ஷர்மிளா தன் வயதையொத்த பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ்வதாகவும் கமல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மேலும் வாசிக்க..



  • ”24 மணிநேரம் உழைக்கும் இல்லத்தரசிகளுக்கு கணவன் சொத்தில் பங்குண்டு" - உயர்நீதிமன்றம் அதிரடி...!


குடும்ப உழைப்பில் ஈடுபடும் சம்பளம் பெறாத பெண்களுக்கு கணவன் ஈட்டிய சொத்தில் சமபங்கு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ”கணவன் சம்பாதிப்பதும், மனைவி குழந்தைகள் – குடும்பத்தை கவனிப்பதும் பொதுவானது எனவும், குடும்பத்தை மனைவி கவனிப்பதால் தான் கணவரால் தனது பணியை செய்ய முடிகிறது என்பதால், கணவனின் சம்பாத்தியத்தில் வாங்கும் சொத்தில் இல்லத்தரசிக்கும் சமப்பங்கு பெற உரிமை உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.


குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதன் மூலம், குடும்ப மருத்துவர் போல, 24 மணி நேரமும், விடுமுறையில்லாமல் ஒரு இல்லத்தரசி மேற்கொள்ளும் பணியை, சம்பாத்தியத்திற்காக கணவன் பார்க்கும் எட்டு மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது" என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் வாசிக்க.



  • தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும்


 மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,  அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


27.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


28.06.2023 முதல் 30.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் வாசிக்க..