இரண்டு நாட்களில் தக்காளியின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


கோயம்பேடு மார்கெட்: 


ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.


கோயம்பேடு மார்க்கெட்டில் நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் காய்கறிகள் வரும். கோயம்பேடு மொத்த விற்பனை மையத்தில் இருந்து சில்லறை விற்பனை வியாபாரிகள் காய்கறிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்வார்கள். வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட் விலையை விட சில்லறை விற்பனை கடைகளில் விலை சற்று அதிகமாக இருக்கும்.


காய்கறி வரத்து குறைவு:


ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு மழை தான் அதிக மழை கொடுக்கும் என்றாலும், தென் மேற்கு பருவ மழை நல்லப்படியாக பெய்தால் தான் தமிழ்நாட்டில் இருக்கும் அணைகளில் நீர் அதிகரிக்கும்.  இருப்பினும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு தென் மேற்கு பருவமழை அதிகம் மழை கொடுக்கும். இந்நிலையில் கடந்த வாரம் முதலே பல்வேறு மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.


அதிகரித்த தக்காளியின் விலை:


ஒவ்வோரு வீட்டிலும் சமையலுக்கு முக்கிய பொருளாக இருப்பது தக்காளி. கடந்த இரண்டு நாட்களில் தக்காளியின் விலை கண்மூடித்தனமாக உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கிலோ தக்களியின் விலை 40 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 100  முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாரிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு தக்காளி 15 கிலோ பெட்டி 800 ரூபாய்கும், நவீன் தக்காளி 15 கிலோ பெட்டி 900 ரூபாய்கும் விற்பனை செய்யபடுகிறது. தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டதன் காரணமாக வரத்து குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Vegetable Price: வாரத்தின் முதல் நாள்.. விண்ணை முட்டும் காய்கறி விலை.. இன்றைய விலை பட்டியல்..!