- 11th Exam : 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? - விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை...!
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி,11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையில்லை. தேர்வு ரத்து தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் அரசு மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/education/11th-exam-cancel-information-explained-as-department-of-school-education-122379/amp
- 12,000 பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது - பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவிப்பு...!
தமிழ்நாட்டில் உள்ள 12,000 பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவித்துள்ளது. முன்னதாக 12 மாதங்கள் ஊதியம் வழங்க கேட்டு அண்மையில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போரட்டத்தின்போது ஜூன் மாதம் அறிவிப்பு வரும் என அமைச்சர்கள் உறுதி அளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தநிலையில் மே மாதம் ஊதியம் வழங்கப்படமாட்டாது என்ற அறிவிப்பால் பகுதி நேர ஆசிரியர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/directorate-of-school-education-has-announced-12-000-part-time-teachers-not-received-their-salary-for-the-month-of-may-122360/amp
- TN Weather Update: சுட்டெரிக்கும் வெயில்.. வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.. இன்றைய வானிலை இப்படி தான்..
10.06.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/according-to-the-meteorological-department-the-temperature-in-tamil-nadu-is-likely-to-be-2-4-degrees-celsius-higher-than-normal-122376/amp
- DMK Update: ’2 கோடி தொண்டர்களை கொண்ட கட்சியானது திமுக’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மறைந்த முதலமைச்சர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட திமுகவில் தற்போது, 2 கோடி தொண்டர்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்சி இணையதளம் தொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “திராவிட இயக்க வரலாறு தலைவர்களின் போராட்டங்கள் - தியாகங்கள், திமுக ஆட்சி கால சாதனைகள், அரிய புகைப்படங்கள், வரலாற்று நிகழ்வுகள், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் அன்றாட செயல்பாடுகள் - சாதனை திட்டங்கள், கழக உறுப்பினர் சேர்க்கை, தொண்டர்கள் உடனான தொடர்பு உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/politics/cm-stalin-leading-dmk-party-have-2-crore-members-official-announcement-in-website-122358/amp