தாம்பரம் (Tambaram News) சென்னை மேற்கு தாம்பரம் வஉசி தெருவில் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக பொன்னி வளவன் என்பவர் பணியாற்றி வருகிறார் இந்நிலையில் கிழக்கு தாம்பரம் பகுதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருபவர் ராஜா ரமேஷ். அவரது டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு சோதனை செய்வதற்காக சென்ற உதவி ஆய்வாளர் பொன்னி வளவன் எங்களுக்கு மாதம் மாதம் பணம் தர வேண்டு.ம் நீங்கள் நேரடியாக அலுவலகத்துக்கு வாருங்கள் பேசிக் கொள்ளலாம் என கூறியுள்ளார். அலுவலகத்திற்கு வந்த ராஜா ரமேஷிடம் பொன்னிவளவன் மாதம் 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இவர் தர மறுத்த போது கடையில் விதிமீறல்கள் இருப்பதாக நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதன் பிறகு ராஜா ரமேஷிடம், ரூ.10 ஆயிரம் கொடுத்தால் விதிமீறல் நோட்டீசை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என பொன்னிவளவன் தெரிவித்துள்ளார்.


லஞ்சம் தர விருப்பம் இல்லாத ராஜா ரமேஷ் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பொன்னிவளவன் அலுவலகத்தில் இருந்த பொழுது ராஜா ரமேஷிடம் சற்று முன் பத்தாயிரம் பணம் வாங்க முயற்சி செய்துள்ளார். அப்பொழுது சென்னை நகர சிறப்பு பிரிவு லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மாலா தலைமையில் அங்கு வந்தனர், பொன்னிவளவன் ராஜா ரமேஷிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை கொடுக்கும் பொழுது கையும் களவுமாக பிடித்துள்ளனர். தொழிலாளர் உதவி ஆய்வாளர் வணிக கடைகளில் லஞ்சம் வாங்கியது உறுதியான நிலையில் அவரை கைது செய்துள்ளனர்.


Pugaar Petti: NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்