TN Headlines Today:
- சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த தவறும் இல்லை.. யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது உயர்நீதிமன்றம்..!
கோகுல்ராஜ் ஆணவக் கொலை மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்த மேல்முறையீட்டு வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேருக்கான ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். அதேபோல் இந்த வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் 5 பேரை விடுவித்தலில் நாங்கள் செல்ல விரும்பவில்லை என கூறினர். மேலும் வாசிக்க..
- 5 ஆயிரம் ஏக்கர்; சென்னையில் உலக தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..
சென்னையில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு விழாவில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ கலைஞரை வாழ்த்துவதற்காக மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கிறார். திராவிட இயக்கததை சார்ந்தவர்களாக இருந்தாலும், காந்தியடிகளுக்கும் எங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை அவர் நன்கு அறிவார். உலக பெரியார் காந்தி என்ற பெயரில் ஒரு புத்தக்கத்தை பேரறிஞர் அண்ணா எழுதினார். நாங்கள் எப்படி காந்தியடிகள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோமோ, அதே போல் தான் திராவிட இயக்கம் மீது கோபாலகிருஷ்ண காந்தி மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளார். அண்ணா, கலைஞரின் அரசியல் ஏழைகளுக்கு, விவசாயிகளுக்கு ஆதரவான, மதவாதத்திற்கு எதிரான அரசியல் என எழுதியுள்ளார். சிறைச்சாலைகளில் கனரக இயந்திரங்கள் வழங்கிய போது அவர் மனதிறந்து பாராட்டினார். கோபாலகிருஷ்ண காந்தி இந்நிகழ்ச்சிக்கு வந்து கலைஞரை பாராட்டி பேசியது என் வாழ்நாளில் கிடைத்திருக்கும் மாபெரும் பேறு. இந்த பெயரை காப்பாற்றும் அளவிற்கு நான் நடந்துக்கொள்வேன் என உறுதியளிக்கிறேன்” என குறிப்பிட்டு பேசினார்.மேலும் வாசிக்க..
- காஞ்சியில் பக்தர்கள் அலையில் கருட சேவை ..பரவசம் அடைந்த பக்தர்கள்..!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ மூன்றாம் நாள் காலை உற்சவம். ஊதா நிற பட்டு உடுத்தி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து காட்சியளித்த காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை உற்சவத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, ஊதா நிற பட்டு உடுத்தி மல்லிகைப்பூ,செரனண்பகப்பூ மலர் மாலைகள், திருவாபரணங்கள் அணிவித்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர்.மேலும் வாசிக்க..
வானிலை நிலவரம்:
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
02.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03.06.2023 மற்றும் 04.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05.06.2023 மற்றும் 06.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வாசிக்க..