• Rain Alert: சண்டே வெளிய போக ப்ளானா? உஷாரா இருங்க.. 13 மாவட்டத்துக்கு மழை எச்சரிக்கை..!


இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மழை எச்சரிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், ஈரோடு, கோவை, நீலகிரி, தென்காசி, தர்மபுரி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 23.07.2023: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-weather-imd-gave-rain-alert-for-next-3-hours-13-districts-include-chennai-erode-thenkasi-130601/amp



  • Madurai AIIMS: 2028ம் ஆண்டுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்ததானம் செய்தார். தொடர்ந்து மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பல இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,"சட்டமன்றத்தில் கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட 110 அறிவிப்புகள் அடுத்த நிதியாண்டுக்குள் நிறைவேற்றப்படும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/madurai/coimbatore-aiims-hospital-work-has-been-done-with-the-funds-of-the-union-government-and-a-request-has-been-made-minister-ma-subramanian-information-130599/amp

 



  • CM Stalin: கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. ”மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வாங்க” என அழைப்பு




மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என, முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ”மணிப்பூரின் தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகவும் கவலையுடனும், வேதனையுடனும் பார்க்கிறது. விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு  பெயர் பெற்ற மாநிலமான மணிப்பூரின் நிலை வேதனை அளிக்கிறது. எனவே தற்போதைய சூழலில் மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்கள் தமிழகத்திற்கு வந்து  விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளலாம்’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/chief-minister-stalin-welcomes-manipur-players-to-make-practice-in-tamilnadu-130586/amp



  • முறைகேட்டில் ஈடுபட்ட துணை ஆட்சியர்கள்...பதவியிறக்கம் செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி..!






தமிழகத்தில் 45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியராக பதவியிறக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.  2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை பதவி உயர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் ஆணையரகம் அறிவித்துள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/deputy-collector-involved-in-malpractice-2014-to-2019-supreme-court-takes-action-by-removing-them-130638/amp



  • Annamalai: வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் நடந்துகொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின்- அண்ணாமலை பேட்டி


மணிப்பூரில் என்ன நடக்கிறது என தெரியாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார். மணிப்பூர் பிரச்சனையை மத்திய அர்சும் மணிப்பூர் அரசும் சரி செய்ய வேண்டும், சரி செய்யும் அவசியத்தில் உள்ளார்கள் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். குற்றாவளிகளுக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தருவோம் எனும் அளவிற்கு மணிப்பூர் முதலமைச்சர் கூறியுள்ளார்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/politics/chief-minister-does-politics-without-knowing-what-is-happening-in-manipur-annamalai-130605/amp