TN Goverment: தமிழகத்தில் 45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியராக பதவியிறக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.


அதிரடி மாற்றங்கள்:


நிர்வாக காரணங்களுக்கு தமிழக அரசுத்துறையில் அவ்வப்போது பணியிட மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு துறை செயலாளர்கள், காவல் அதிகாரிகள் உள்பட அரசின் பல்வேறு துறைகளின் பணியிட மாற்றங்களை அவ்வப்போது தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும். அதன்படி சமீபத்தில்  13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும் முக்கிய துறைகளில் அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு. மேலும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக சமீபத்தில் தான் ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார்.  அதேபோன்று டிஜிபியாக சங்கர் ஜிவாலை நியமிட்டார்.


தமிழ்நாடு அரசு நடவடிக்கை:


இந்நிலையில், தற்போது தமிழகத்தில் 45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியராக பதவியிறக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2014 முதல் 2019ஆம் அண்டு வரை வட்டாட்சியராக பணியாற்றி வந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதில் சில முறைகேடுகள் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடிவில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டினை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி  தீர்ப்பு வழங்கியது.  


உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி,  தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 45 துணை ஆட்சியர்கள் வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று, 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டு இருக்கிறது.