தமிழ்நாடு அரசைக் கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் மணிப்பூர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, மணிப்பூரைப் பொறுத்தவரையில் தூங்கிக்கொண்டு இருந்த முதலமைச்சர் என்ன நடக்கிறது என தெரியாமல அவர் விருப்பத்திற்கு பேசிக்கொணடுள்ளார். தமிழ்நாட்டில் சமூகநீதி என்பது குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டு 210 நாட்கள் ஆகிறது, அதில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்றைக்கு கூட,  மணிப்பூரில் என்ன நடக்கிறது என தெரியாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார். மணிப்பூர் பிரச்சனையை மத்திய அர்சும் மணிப்பூர் அரசும் சரி செய்ய வேண்டும், சரி செய்யும் அவசியத்தில் உள்ளார்கள். அதேபோல் கடந்த மே மாதம் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் மணிப்பூரில் நடந்துள்ள அநியாயம் கொடூரம் என்பது நம் அனைவரையும் கூட மிகப்பெரிய பாதிப்பை உள்ளாக்கியிருக்கிறது. இந்தியாவில் நமது மண்ணில் ஒரு பெண்ணுக்கு இதுபோல் ஒரு அநியாயம் நடந்துள்ளது. அந்த வீடியோ வெளியான பின்னர் மணிப்பூர் மாநில அரசு தனது பணியை மிகவும் கடுமையாக செய்து வருகிறது. இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர். குறிப்பாக மணிப்பூர் முதலமைச்சர் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தவோம் எனும் அளவிற்கு பேசியுள்ளார். 


இன்றைக்கு நான் இங்கு பேசிக்கொண்டு இருக்கும்போது கூட மணிப்பூரில் களமிறக்கப்பட்டுள்ள ராணுவத்தினர் கடுமையான பொருட்சேதம், உயிர்ச்சேதம் ஏற்படாத வகையில் பாதுகாத்து வருகிறார்கள். மணிப்பூரின் கடந்த காலம் நமக்கு தெரியும் மணிப்பூர் என்பது எப்போதும் அமைதியை தனது பக்கத்தில் வைத்திருக்காத மாநிலம். 2014க்கு முன்பு எடுத்துக்கொண்டால் மணிப்பூரில் நடைபெற்ற கொலை, மரணங்கள் என எல்லாமே நமக்கு தெரியும். 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் மணிப்பூர் அமைதியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவின் பேரில், குக்கி சமூகத்திற்கு எஸ்.டி அந்தஸ்து உள்ளது, மெய்த்தி சமூகத்திற்கு எஸ்.டி அந்தஸ்து இல்லை, அவர்களுக்கும் எஸ்.டி அந்தஸ்து கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறிய பின்னர், குக்கி மற்றும் மெய்த்தி மக்களிடையே கலவரமாக வெடித்துள்ளது. இதனால் மாநில அரசு அமைதியை நிலைநாட்ட முயற்சித்துக்கொண்டுள்ளது. சம்பந்தம் இல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் வேடிக்கையும் விசித்திரமும் செய்து கொண்டிருக்கிறார். மேலும் இது அவர் முழு நேர அரசியல்வாதியாக இருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.