• ஏவல் அமைப்பான அமலாக்கத்துறை.. பயமுறுத்த பாக்றாங்க, பலிக்காது - பாஜகவை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்


அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌவுதம் சிகாமணி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்,  பாஜகவை விழ்த்துவதற்காக கூட்டப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் பாஜக அரசுக்கு எரிச்சலை தந்துள்ளது. அதனுடைய வெளிப்பாடு தான், மத்திய அரசால் அமலாக்கத்துறை இன்று ஏவப்பட்டுள்ளது. ஆனால், அதைபற்றி எல்லாம் கிஞ்சித்தும் திமுக கவலைப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க



  • அமலாக்கத்துறை பிடியில் பொன்முடி, கௌதம் சிகாமணி?.. 


அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதற்கு, திமுக கூட்டணி கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌவுதம் சிகாமணி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கௌவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்தது மூலமாக 28 கோடிக்கும் மேல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக புகாரில் சோதனை நடக்கிறது.மேலும் படிக்க



  • அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. கவுண்டவுன் தொடங்கியது - தலைவர்கள் கண்டனம்..!


அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதற்கு, திமுக கூட்டணி கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தலைவர்கள், ‘ மத்திய அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன, அவர்களது வீட்டில் அமலாக்கத்துறை என்றாவது சோதனை நடத்தியுள்ளதா? தமிழ் மண்ணில் தான் பாஜக தோல்வியடையும். அமலாக்கத்துறை சோதனையால் மக்களிடையே எதிர்க்கட்சியினருக்கு செல்வாக்கு அதிகமாகும். அரசியல் செய்ய தெரியாத பாஜகவிற்கு, நேருக்கு நேர் எதிர்கொள்ள திராணி இல்லை’ என தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க



  • ‘சமூக அக்கறையுடன் செயல்படும் தம்பி சூர்யாவுக்கு வாழ்த்துகள்’ ... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!


ஏழை, எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யாவிற்கு வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்கில் முன்னாள் நீதிபதி முன்னெடுப்பில், நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் இணைந்து சத்யதேவ் அகாடமியை உருவாக்கியுள்ளனர். இதில் நடிகர் சூர்யாவின் பங்களிப்பை குறிப்பிட்டு முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் படிக்க



  • அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்.. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை..


மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று முதல் ஜூலை 23 ஆம் தேதி வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க