CM MK Stalin: சோசியல் மீடியாக்களை கவனிங்க - மோதல்கள் உண்டாக்குவோர் மீது நடவடிக்கை எடுங்க - முதலமைச்சர் உத்தரவு..!
தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், “சமூக வலைதளங்களில் சாதி, மத மோதல்களை தூண்டுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். காவல் மரணங்களை தடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்காதவண்ணம் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tn-cm-mk-stalin-meeting-directed-to-monitor-take-action-against-those-who-instigate-caste-religious-conflicts-on-social-media-128198/amp
கொடநாடு பிரச்சனையை கையில் எடுத்த ஓபிஎஸ் - பதிலடி கொடுத்த ஜெயக்குமார்
அதிமுக ஆட்சியில் கொடநாடு வழக்கில் விசாரணைகள் முடிந்து தீர்ப்பு வழங்கும் நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் ஐஜி விசாரித்து வந்த வழக்கை, ஏன் உதவி காவல் கண்காணிப்பாளருக்கு மாற்ற வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/ex-minister-jeyakumar-press-meet-and-explain-kodanad-case-128161/amp
Governer RN ravi meets Venkataramani: விஸ்வரூபம் எடுக்கும் செந்தில் பாலாஜி விவகாரம்: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆளுநர் ரவி சந்திப்பு...
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெறுவதற்காக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணியை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார். 7 நாள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்தார். இந்நிலையில் அவர் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை சந்தித்தார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற ஆளுநர் வழக்கறிஞரை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/governor-ravi-meeting-with-chief-advocate-of-central-government-regarding-senthil-balaji-s-removal-from-cabinet-128182/amp
ADMK: எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக பொதுச்செயலாளர் - அங்கீகரித்தது இந்திய தேர்தல் ஆணையம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு அளித்த ஆவணங்களையும் இணையதளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக முழுமையாக அங்கீகரித்துள்ளது என்பதால், எடப்பாடி தரப்பினர் மகிச்சி அடைந்துள்ளனர். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/admk-general-secretary-edappadi-palaniswami-officially-recognized-election-commission-128138/amp
TN Rain Alert: இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. இன்றைய வானிலை நிலவரம்..
11.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 12.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/heavy-rain-is-likely-in-10-districts-of-tamil-nadu-today-according-to-the-meteorological-department-128200/amp