• DMK Slams Anbumani: ”சென்னையில் வீராவேசம், டெல்லியில் பெட்டி பாம்பாகும் அன்புமணி” - லெஃப்ட் ரைட் வாங்கிய அமைச்சர்


“சென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்?” என, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “என்.எல்.சி விரிவாக்கத் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை” என ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி மாநிலங்களவையில் அறிவித்திருக்கிறார். அதுவும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்ட கேள்விக்கு அவ்வாறு எழுத்துப்பூர்வமான பதிலை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க 



  • Central Govt On NLC: அப்ப விவசாயம்..! நெய்வேலியில் என்.எல்.சி விரிவாக்கம் தொடரும், இன்னும் 2600 ஏக்கர் தேவை - மத்திய அரசு திட்டவட்டம்..!


நெற்பயிர்கள்  அறுவடைக்கு தயாராக இருந்த நிலங்களில் இயந்திரங்களை இறக்கி, என்.எல்.சி நிறுவனம் நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொண்டதை,  அவ்வளவு எளிதாக தமிழக மக்கள் யாரும் மறந்து இருக்க மட்டார்கள். நீதிமன்றமும் கூட கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தது. இந்நிலையில் நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை நிறுத்தும் திட்டம் இல்லை எனவும், கூடுதல் நிலம் தேவைப்படுவதாகவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.” மேலும் படிக்க 



  • Kalashetra Row: கலாஷேத்ரா கல்லூரி ஆசிரியர் ஹரி பத்மனுக்கு அதிகபட்ச தண்டனை: விசாரணைக் குழு பரபரப்பு அறிக்கை- விவரம்!


கலாஷேத்ரா கல்லூரி ஆசிரியர் ஹரிபத்மன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக் குழுவின் சுமார் 2000 பக்கங்கள் கொண்ட அறிக்கை முடிவுகள் கிடைத்துள்ளன. இதன்படி, ஹரிபத்மன் உண்மையிலேயே குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கவேண்டுமென விசாரணக் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க 



டெல்லியை ஒரு மாநாகராட்சியை போல் தரம் குறைக்கும் டெல்லி மசோதா நிறைவேறிய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் #DelhiServicesBill மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்! எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற @BJP4India -வின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது? என்றார். மேலும் படிக்க 



  • TN Weather Update: வாட்டி எடுக்கும் வெயில்.. அடுத்த சில நாட்களுக்கு இப்படித்தான்.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..


மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 14 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது.08.08.2023 மற்றும் 09.08.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும்.  அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். மேலும் படிக்க