• விசாரணை வளையத்துக்குள் செந்தில் பாலாஜி.. மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..


அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை தவறானது என்றும் காவலில் எடுத்து விசாரிக்ககூடாது என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அமலாக்கத்துறை கைது செய்தது சரி என்றும், விசாரணை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பின்னடைவாக செந்தில் பாலாஜிக்கு அமைந்துள்ளது. மேலும் படிக்க



கலைஞர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைப்பற்றது.  இன்று கலைஞர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடப்பது வழக்கமாகும்.சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகே புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடைபெற்றது. மேலும் படிக்க



  • புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி குமரியிலிருந்து டெல்லி வரை ரத யாத்திரை - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை ரத யாத்திரை நடத்தப்படும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். ஓய்வூதியத்தை மத்திய அரசு எப்படி நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றி கொண்டு வந்தார்களோ அதைபோன்று நாடாளுமன்றத்திலேயே சட்டத்தை நிறைவேற்றி அதை நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக தான் நாங்கள் ரத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம். மேலும் படிக்க



  • அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்பட வேண்டும் - ஓபிஎஸ் அறிக்கை..


அரசு போக்குவரத்து கழகங்களில் இருக்கும் காலி பணியிடங்களை தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நிரப்பிட வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பான அறிக்கையில், “ அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் படிக்க



  • அடுத்த 2 நாட்களுக்கு செம்ம வெயில் இருக்கு மக்களே.. ஆனா.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..


மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதேசமயம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில  இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும், ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க