TN Headlines Today: முதலமைச்சர் ட்வீட் நீக்கம் - காரணம் என்ன? - ராணுவம் விளக்கம்


தமிழகத்தை சேர்ந்த முதல் பெண் ராணுவ ஜெனரல் தொடர்பான ட்வீட்டை நீக்கப்பட்டது குறித்து எழுந்த சர்ச்சை தொடர்பாக ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் டிவிட்டர் பதிவு நீக்கம் குறித்து ராணுவ தலைமையகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், முதல் பெண் மேஜர் ஜெனரல் குறித்து ராணுவ தலைமையகம் பதிவிடுவதற்கு முன்னதாக, வடக்கு கமாண்ட் பதிவிட்டதால், அதை திருத்தும் விதமாக டிவிட்டர் பதிவு நீக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..


100 ஆண்டுக்கு பின் கோயிலுக்குள் சென்று வழிபாடு; மகிழ்ச்சியில் பட்டியலின மக்கள்


திருவண்ணாமலை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது 100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் ஊர் மக்கள் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு விசேஷ நாட்களில் ஒன்று கூடி சாமி வழிபாடு உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். அதேபோல அதே கிராமத்தில் ஆதிதிராவிட சமூகத்தை சார்ந்தவர்களுக்காக காளியம்மன் திருக்கோவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்தவர்களின் சார்பில் கட்டப்பட்டு அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது. நூறாண்டுகளுக்கு மேலாக கோயிலுக்குள் செல்ல முடியாத பட்டியல் இன மக்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் சென்று சமத்துவ பொங்கல் வைத்து சாமி தரிசனம் மேற்கொண்டதால் அம்மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பட்டியலின மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படக்கூடிய நிலையில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.மேலும் வாசிக்க.


காசிக்கு போகணுமா? உங்களுக்காகவே ஸ்பெஷல் ட்ரெயின்..


‘தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை’க்கு தென்காசியில் இருந்து வாராணாசிக்கு பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் பல சுற்றுலாத்தளங்கள் மற்றும் ஆன்மீக தளங்களை மக்கள் எளிதாக சுற்றிப்பார்ப்பதற்கு இந்திய ரயில்வே துறை பாரத் கௌரவ் ரயில்கள் திட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த்து. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து கயா, ஷீரடி, காசி, வாரணாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.மேலும் வாசிக்க..


திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திமுவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்து இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தலைமை தாங்குகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயாளர் துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும் வாசிக்க.


சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் .. முதலமைச்சர், அரசியல் கட்சியினர் மரியாதை


சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்திற்கு மலர் தூவியும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலரும் மரியாதை செலுத்தினர். சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு, கயல்விழி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மேலும் வாசிக்க..


Theeran Chinnamalai Memorial Day: வீராதி வீரன் தீரன் சின்னமலையின் 218 வது நினைவு தினம்...


தீர்த்தகிரி என்ற இயற்பெயர் கொண்ட தீரன் சின்னமலை ஈரோடு மாவட்டம் காங்கேயம் பகுதியில் 1756 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்தார். இளமையிலேயே பல்வேறு வித்தைப் பயிற்சிகளை இளைஞர் படைகளோடு உருவாக்கி வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள், திப்பு சுல்தான் ஆகியோரோடு சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்டு பல்வேறு போர்களில் வெற்றிவாகை சூடியவர்.மேலும் வாசிக்க..


இனிமே மழைக்கு வாய்ப்பில்லை..


மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 09.08.2023 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் வாசிக்க..


யுபிஎஸ்சி தேர்வரா நீங்க? மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்


யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் 1000 மாணவர்களுக்கு, ஆரம்ப நிலையிலேயே மாதந்தோறும் ரூ.7,500 ஊக்கத்தொகையை வழங்க தமிழக அரசு தயாராக உள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.  ஏற்கெனவே அரசு சார்பில் யுபிஎஸ்சி (UPSC) முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்ட நிலையில், தற்போது முதல்நிலைத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். மேலும் வாசிக்க..