யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் 1000 மாணவர்களுக்கு, ஆரம்ப நிலையிலேயே மாதந்தோறும் ரூ.7,500 ஊக்கத்தொகையை வழங்க தமிழக அரசு தயாராக உள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். 


ஏற்கெனவே அரசு சார்பில் யுபிஎஸ்சி (UPSC) முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்ட நிலையில், தற்போது முதல்நிலைத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். 


புதியவர்களுக்கும் வாய்ப்பு


இதில், 50 மாணவர்கள் முதல்முறையாகத் தேர்வை எழுதுபவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு 21 வயது முடிந்திருக்க வேண்டும். அதேநேரத்தில் 01.08.2024-ல் 22 வயதை எட்டாமல் இருக்க வேண்டும். எனினும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. ஏதேனும் ஓர் இளங்கலைப் பட்டத்தை முடித்திருக்க வேண்டும். 


ஏற்கனவே அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான (ஆர்.ஏ. புரம் சென்னை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை மற்றும் காமராஜர் பல்கலைக்கழகம் மதுரை) நுழைவுத் தேர்வும் இதில் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதனால் அந்த மையங்களுக்குத் தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படாது.


தேர்வு மையங்கள்


தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்களில்  கொள்குறி வகையில் மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. கேள்விகளின் மொத்த எண்ணிக்கை - 150 (100 பொது அறிவு - 50 CSAT)


1. தவறான பதில்களுக்கு எதிர்‌மறை மதிப்பெண்கள்‌ இல்லை.
2. கேள்விகள்‌ ஆங்கிலத்தில்‌ மட்டுமே இருக்கும்‌.




பாடத்திட்டம்‌ என்ன?


பொது அறிவு


1. தேசிய மற்றும்‌ சர்வதேச முக்கியத்துவம்‌ வாய்ந்த தற்போதைய நிகழ்வுகள்‌.


2. இந்தியாவின்‌ வரலாறு மற்றும்‌ இந்திய தேசிய இயக்கம்‌.


3. இந்திய மற்றும்‌ உலக புவியியல்‌- இந்தியா மற்றும்‌ உலகத்தின்‌ இயற்கை, சமூக, பொருளாதார புவியியல்‌.


2. இந்திய அரசியல்‌ மற்றும்‌ ஆட்சி - அரசியலமைப்பு, அரசியல்‌ நடைமுறை, பஞ்சாயத்து ராஜ்‌, பொதுக்‌ கொள்கை, உரிமைகள்‌ சிக்கல்கள்‌ போன்றவை


5. பொருளாதாரம்‌ மற்றும்‌ சமூக மேம்பாடு - நிலையான வளர்ச்சி, வறுமை, உள்ளடக்கிய வளர்ச்சி, மக்கள்தொகை, சமூகத்‌ துறை முயற்சிகள்‌ போன்றவை.


6. சுற்றுச்சூழல்‌ சூழலியல்‌, பல்லுயிர்‌ மற்றும்‌ காலநிலை மாற்றம்‌ பற்றிய பொதுவான சிக்கல்கள்‌.


7. பொது அறிவியல்‌


CSAT


1. ஆங்கில புரிதல்‌


2. தொடர்பாடல்‌ திறன்‌ உட்பட தனிப்பட்ட திறன்கள்‌


3. தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும்‌ பகுப்பாய்வு திறன்‌


4. முடிவெடுத்தல்‌ மற்றும்‌ சிக்கலைத்‌ தீர்ப்பது


5. பொது மன திறன்‌


6. அடிப்படை எண்‌ (எண்கள்‌ மற்றும்‌ அவற்றின்‌ உறவுகள்‌, அளவின் வரிசைகள்‌ போன்றவை) - பத்தாம்‌ வகுப்பு நிலை)


7. தரவு விளக்கம்‌ (விளக்கப்படங்கள்‌, வரைபடங்கள்‌, அட்டவணைகள்‌, தரவு போதுமானது போன்றவை - பத்தாம்‌ வகுப்பு நிலை.


விண்ணப்பிப்பது எப்படி?


இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள் https://nmcep.tndge.org/register?sub_id=eyJpdiI6ImZreUFYN0E3V0tjc0hxa3doZmQ4UXc9PSIsInZhbHVlIjoiS0kwQURNVTB1WTM1ZSt6eXVhYVlUdz09IiwibWFjIjoiNzI0MzVjMjY2YjQxYzQ5ZGI3MWI3NDFjOGQ3MWRmMDc4ZGYyOTk5NmM3ZmIwNDJiYjk5MjlhNTk3ZGFmMDU1ZSIsInRhZyI6IiJ9 என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, முன்பதிவு செய்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும். 


இதற்கான விண்ணப்பப் பதிவு நேற்று (02.08.2023) தொடங்கிய நிலையில், தேர்வர்கள் 17.08.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு முறை குறித்து முழுமையாக அறிய https://naanmudhalvan.tn.gov.in/pdfs/UPSC%20PRELIMS%20Scholarship%20Exam-%20Notification.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யுங்கள். 


மேலதிக தகவல்களுக்கு 


செல்பேசி எண்கள்- 9043710214 / 9043710211  (10:00 am – 05:45 pm)