• TNPSC Chairman: டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு; ஆளுநருக்கு மீண்டும் கோப்புகளை அனுப்பிய தமிழக அரசு


டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமிப்பது தொடர்பாக உரிய விளக்கங்களுடன் கூடிய கோப்புகளை தமிழக அரசு மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி உள்ளது.  டிஎன்பிஎஸ்சி அமைப்பின் தலைவர் பதவிக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பிய நிலையில், சம்பந்தப்பட்ட கோப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தார்.  டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும். மேலும் படிக்க 



  • CM Breakfast Scheme: கவனமீர்க்கும் காலை உணவுத் திட்டம்: தெலங்கானா அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு வந்து நேரில் ஆய்வு!


முதலமைச்சரின்‌ காலை உணவுத் திட்டம் ‌ இந்திய அளவில்‌ கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தெலங்கானா அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். உணவு தயாரிக்கும்‌ முறையையும்‌, அதை பள்ளிகளுக்குக்‌ கொண்டு சேர்க்கும்‌ முறையையும்‌ ஆய்வு செய்த குழுவினர், பள்ளிக்‌ குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்படுவதைப்‌ பார்வையிட்டனர்‌. தமிழ்நாட்டில்‌ தொடக்கப்‌ பள்ளி மாணவர்களுக்கென செயல்படுத்தப்பட்டு வரும்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்,‌ அண்மையில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ விரிவுபடுத்தப்பட்டது. மேலும் படிக்க 



  • TN Rain Alert: இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..


 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சிராப்பள்ளி, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க 



  • CM Stalin: இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்.. மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..


2014-ஆம் ஆண்டு, 2019-ஆம் ஆண்டு என நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க. அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், இன்னும் 9 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க தனது வெற்றியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. அதே சமயம் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்து களம் இறங்கியுள்ளனர். மேலும் படிக்க 



  • CM Stalin To Launch Podcast: ஆரம்பிக்கலாங்களா..! பாட்காஸ்டில் முதலமைச்சர் ஸ்டாலின்.. ”தெற்கிலிருந்து இந்தியாவிற்கான குரல்”


இந்தியாவிற்கான பேச்சு என்ற தலைப்பில் பாட்காஸ்டில் பேச உள்ளதாக, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசி, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அந்த வீடியோவில், “ செக்..1..2..3... ஆரம்பிக்கலாங்களா..! வணக்கம்.  கடந்த சில மாதங்களாக உங்களில் ஒருவன் என்கிற தலைப்பில் கேள்வி பதில் வடிவத்தில் பல்வேறு விவகாரங்களை உங்களிடம் பகிர்ந்துகொண்டேன். மேலும் படிக்க