நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் (NHAI) உள்ள 816 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. அதில், தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் 27 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த சூழலில் மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் இன்று இரவு முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இது நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது. கிடைத்த தகவலின்படி, ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இரு முறை கட்டணம் உயர்த்தப்படும். அதில், முதன்மையாக உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் மாதமும், அதன்பிறகு மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படும்,. 


- PM Modi Terminator: திரும்ப வருவேன்.. அர்னால்ட் போஸ், டெர்மினேட்டர் ரோபோ ஆன பிரதமர் மோடி..! பாஜக போட்ட அதிரடி டிவீட்




இதன் ஒரு பகுதியாக மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் தினமும் 30,000 மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் கனரக லாரிகள் மதுரையில் இருந்து தூத்துக்குடி சாலை செல்வதும் தூத்துக்குடியில் இருந்து மதுரை வருவதாக இருந்து வருகிறது.




இந்த நிலையில், செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளது என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய அரசு விலைப்பட்டியல் குறித்தும் அட்டவணை வெளியிட்டிருந்தது. அதில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்றுவர 85 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக உயர்ந்துள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.2505 லிருந்து 2740 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.290-லிருந்து 320 ரூபாயாகவும், இருமுறை சென்றுவர 440ல் இருந்து 480 ரூபாயாகவும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் லாரி ஓட்டுனர்கள் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் பாதிக்கு மேல் சுங்கச்சாவடிக்கு கட்டும் நிலை உருவாகியுள்ளது, என்று லாரி ஓட்டுநர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மதுரையில் எலியாரப்பத்தி டோல்கேட் மட்டுமே மத்திய அரசின் விலை ஏற்றம் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.




தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களிடம், சாலை பயன்பாட்டிற்கான கட்டணம் வசூலிப்பதற்காக, பல இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழகத்தின் 20 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண உயர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. 


பெரும்பாலும் சுங்கச்சாவடிகளில் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர்களே தங்கள் வாழ்வாதாரத்திற்காக அதிகம் பயணிக்கின்றன. இந்த கட்டண உயர்வால் பாதிக்கப்படுவர்களும் அவர்களே. இந்த கட்டண உயர்வு குறித்து முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Toll Gate Charges In Tamilnadu: நள்ளிரவு முதல் 28 சுங்கச்சாவடிகளில் அதிரடியாக உயரும் கட்டணம்.. அதுவும் எவ்வளவு தெரியுமா?


மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சிறப்பு சேர் வேண்டாம், பிளாஸ்டிக் சேர் போதும்; அமைச்சர் செயலால் நெகிழ்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம்