TN Headlines Today:


அண்ணாமலையின் நடைபயணம் நகைப்பிற்குரியதாக இருக்கிறது’ - கே.பாலகிருஷ்ணன்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மணிப்பூர் கலவரம் 3 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடிக்கிறது. இன்னும் அக்கலவரம் கட்டுப்படுத்தப்படவில்லை. இது மெய்தி, குக்கி என்ற இரு பிரிவினரிடையேயான மோதல் என்கின்றனர். ஆனால் இந்த கலவரத்தை தூண்டிவிடுவதே மணிப்பூர் மாநில பா.ஜ.க அரசுதான். மணிப்பூர் மலைகளில் இருந்து குக்கி மக்களை அகற்றிவிட்டு அம்பானி, அதானிக்கு தாரைவார்க்கவே இது போன்ற செயல்களில் பா.ஜ.க  ஈடுபடுகின்றது. மணிப்பூர் முதல்வரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு தயாராக இல்லை. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவிலை. மணிப்பூர் முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மணிப்பூர் மக்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்களை கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருப்பதை வரவேற்கிறோம். மேலும் வாசிக்க.


அடுத்த செக்! வலையில் சிக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்! 


சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் அனிதா ராகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி செல்வம் விடுமுறையில் உள்ளதால் விசாரணை 23ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் (2001-06) வீட்டுவசதி வாரியத்துறையின் அமைச்சராக இருந்தார். அப்போது இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4,90,29,040  அளவுக்கு சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. மேலும் வாசிக்க..


மக்களவை தேர்தல் 


மக்களவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களத்தில் அதிரடி அரசியல் நகர்வுகள் அரங்கேறி வருகின்றன.
கடந்த இரண்டு தேர்தல்களிலும், வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், மூன்றாவது முறையாக வென்று ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.கடந்த இரண்டு தேர்தல்களிலும், பாஜக வெற்று பெறுவதற்கு உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களே காரணம். மேல்குறிப்பிட்ட இந்த மாநிலங்களில், 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் பாஜகவே வெற்றிபெற்றது.மேலும் வாசிக்க..


 தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மழையா?


நேற்று (01.08.2023) வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை வங்காளதேசம் கடற்கரையை கடந்தது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 02.08.2023 முதல் 08.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.மேலும் வாசிக்க..


ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!


மகாராஷ்ராவில்  இந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு தமிழர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் விரைவுச்சாலை திட்டத்துக்கான பாலம் கட்டுமானபணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் என்றும் அவர்களில் இருவர் கிருஷ்ணகிரி மாவட்டம். போகனப்பள்ளி ஊராட்சி, விஐபி நகரைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 36) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 23) என்றும் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன்.கிரேன் சரிந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு தமிழர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார்.மேலும் வாசிக்க..


முதலமைச்சர் ஐயா அவர்களே, கண்டுபிடித்து கொடுங்கள் ப்ளீஸ் " - ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்


கோடநாடு கொலை வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி கொலை குற்றவாளிகளை கைது செய்ய தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித் குமார் தலைமையில் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் வாசிக்க..


நாளை ஆடிப்பெருக்கு


ஆடிப்பெருக்கை முன்னிட்டு மலர் சந்தையில் பூக்களின் விலை வழக்கத்தை விட இன்று அதிகமாக விற்கப்பட்டு வருகிறது. நாளை ஆடிப்பெருக்கு என்பதால் மலர் சந்தையில் பூக்களின் விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  மதுரை, திண்டுக்கல், தோவாளை, தூத்துக்குடி ஆகிய இடங்களின் மலர் சந்தையில் மல்லிகை, முல்லை, பிச்சிப்பூ ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.800க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல முல்லை பூ கிலோ ரூ.7,600, பிச்சிப்பூ கிலோ ரூ.700, கனகாம்பரம் கிலோ ரூ.500, செண்டு கிலோ ரூ.100, ரோஸ் கிலோ ரூ.250, செவ்வந்தி ரூ.280, அரளிப்பூ ரூ.200, மரிக்கொழுந்து ரூ.100, வாடாமல்லி ரூ.100, கோழிக்கொண்டை ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆண்டிப்பட்டி மலர் சந்தையில், மல்லிகைப்பூ கிலோ ரூ.700க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது மேலும் வாசிக்க..