- Madras University: பழம்பெருமை வாய்ந்த சென்னை பல்கலைக்கழகத்துக்கு ஏ ++ அந்தஸ்து; வழங்கியது யுஜிசி
நாட்டின் பழம்பெருமை வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு ஏ ++ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. யுஜிசி சார்பில் தேசிய தர மதிப்பீடு, அங்கீகாரக் குழு (நாக்) இதை வழங்கியுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் (Madras University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம், 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. மேலும் படிக்க
- TN Rain Alert: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..
22.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 23.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க
- Governor RN Ravi: தமிழக பல்கலைக்கழகங்களுக்கு பறந்த புதிய உத்தரவு..! அரசை பழிவாங்குகிறாரா ஆளுநர் ஆர்.என். ரவி?
தமிழகத்தில் செயல்படும் பல்கலைக்கழகங்கள் பொதுப்பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டியதில்லை என, ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதியுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லுாரிகள் தாங்களே பாடத்திட்டத்தை உருவாக்கிக்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுப்பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை' என ஆளுநர் ரவி வலியுறுத்தியுள்ளார். மேலும் படிக்க
- BJP On Cauvery Issue: ”தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் கொடுத்தது தவறு” - பாஜக ஆவேசம்
காவிரி நதியிலிருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு உரிய அளவு நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் உத்தரவிட்டும் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரை கர்நாடக அரசு இதுவரை திறந்து வைக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஏற்கனவே அம்மாநிலத்தில் இருந்த பாஜக அரசு பின்பற்றிய அதே கொள்கையை தான், தற்போதுள்ள காங்கிரஸ் அரசும் பின்பற்றி வருகிறது. மேலும் படிக்க
- TNPSC: டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திர பாபு நியமனம் - அரசு அனுப்பிய கோப்பை திருப்பி அனுப்பிய ஆளுநர்..
டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்பை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார். டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற கூறிய வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை என கூறி ஆளுநர் தமிழ்நாடு அரசின் கோப்பை திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர். டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க