TN Headlines Today:


 சுதந்திர தினத்தன்று ஆளுநர் தரும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என். ரவி தரும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். “77-வது விடுதலை நாள் விழாவினையொட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தினைப் புறக்கணிக்கிறோம்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “குமரிக் கடல் முதல் இமயப் பெருமலை வரை வாழும் மக்கள் ஒன்றுபட்ட சிந்தனையுடன் போராடிப் பெற்றதே இந்திய நாட்டின் விடுதலை ஆகும்.மேலும் வாசிக்க..


நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல்


நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி குடியரசுத் தலைவர் முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுத உள்ளார். சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தரும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ’’இதுவரை விலைமதிப்பில்லா பல மாணவச் செல்வங்களின் உயிர்களை, நீட் தேர்வு முறை காரணமாக தமிழ்நாட்டில் நாம் இழந்திருக்கிறோம். இவர்களின் மரணங்கள் எழுப்பும் தார்மீகக் கேள்விகள் நமது மனச்சாட்சியை உலுக்கி வருகின்றன.மேலும் வாசிக்க..


நீட் கொலை


சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் என்பவர் நீட் தேர்வில் தொடர்ந்து தேர்ச்சி பெற்றாலும்,  எதிர்பார்த்த அளவிலான மதிப்பெண்கள் கிடைக்காததால், அவரது மருத்துவர் கனவை எட்டமுடியாத வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அவரது குடும்பம் மற்றும் சக மாணவர்களும் நண்பர்களும் வேதனை அடைந்துள்ளனர். நீட் தேர்வினால் மற்றொரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளாதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் வாசிக்க..


 '3,000 பக்க குற்றப்பத்திரிகை.. வழக்கு ஆவணங்களை தர வேண்டும்..'


சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களை (குற்றப்பத்திரிகை, கைது குறிப்பானை உள்ளிட்ட) முழுமையாக வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும் வாசிக்க..


அஸ்ரா கார்க் உள்ளிட்ட 15 காவல்துறை அதிகாரிகளுக்கு விருது


மிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் 15 பேரின் பணியை பாராட்டி விருது வழங்கப்படும் என, தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெள்யிட்டுள்ள அறிவிப்பில் “ பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும்மேலும் வாசிக்க..


எத்தனை உயிர்கள் பலியானாலும் ஆளுநர் போன்றவர்களின் இதயம் கரையப் போவதில்லை


நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்துக்கொண்டதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர்  ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகரும் மறுநாளில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜெகதீஸ்வரன் குடும்பத்துக்கும், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் என்ன சொல்லி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை.நன்றாகப் படிக்கும் மகன், மருத்துவர் ஆவான் என்று தான் அவரைப் பெற்ற பெற்றோர் நினைத்திருப்பார்கள். ஆனால் நீட் தேர்வு எனும் பலிபீடத்தில் பலியானவர்கள் பட்டியலில் ஜெகதீஸ்வரன் சேர்ந்துவிட்டது மிகக் கொடூரமான நிகழ்வாகும்.மேலும் வாசிக்க..


வாகன ஓட்டிகளை சுரண்டும் பரனூர் சுங்கச்சாவடி..


கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021 வரை பரனூர் சுங்கச்சாடியில் விதிகளை மீறி வாகன ஓட்டிகளிடம் ரூ. 22 கோடி கூடுதல் சுங்கக் கட்டணத்தை வசூலித்து இருப்பது மத்திய தணிக்கை அறிக்கையில் தெரியவந்து உள்ளது. இதேபோல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இருபுறங்களிலும் கழிவறை கட்டப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. மேலும் வாசிக்க..


பட்டம் விடும் திருவிழா


மாமல்லபுரத்தில் இரண்டாவது நாளாக நடைபெறும் பட்டம் விடும் திருவிழாவில் அந்த பகுதியே திருவிழா கோலம் பூண்டுள்ளது. மாமல்லபுரத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பட்டம் விடும் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று துவங்கிய இந்த திருவிழா வரும் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 12,000 சுற்றுலா பயணிகள் இந்த காத்தாடி திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.மேலும் வாசிக்க..