தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 மாவட்டங்கள்:
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
15.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16.08.2023 முதல் 20.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
14.08.2023: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
15.08.2023 (சுதந்திர தினம்): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
ஜமீன் கொரட்டூர் (திருவள்ளூர்) 14, திரூர் Kvk AWS (திருவள்ளூர்) 12, அம்பத்தூர் (திருவள்ளூர்), ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்) தலா 11, பூந்தமல்லி (திருவள்ளூர்), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), மதுரவாயல் (சென்னை), முகலிவாக்கம் (சென்னை), மலர் காலனி (சென்னை), வளசரவாக்கம் (சென்னை), அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (காஞ்சிபுரம்) தலா 10, டிஜிபி அலுவலகம் (சென்னை), சென்னை விமான நிலையம் (சென்னை), அடையாறு (சென்னை), ராயபுரம் (சென்னை), டி.வி.கே.நகர் (சென்னை), கொளத்தூர் (சென்னை), ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) தலா 9, திருவள்ளூர் (திருவள்ளூர்), எம்ஜிஆர் நகர் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), தேனாம்பேட்டை (சென்னை) தலா 8, பெரம்பூர் (சென்னை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), ஆலந்தூர் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), செம்பரபாக்கம் (காஞ்சிபுரம்), செம்பரம்பாக்கம் ஏஆர்ஜி (காஞ்சிபுரம்), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), அண்ணாநகர் (சென்னை) தலா 7, தாம்பரம் (செங்கல்பட்டு), ஆவடி (திருவள்ளூர்), பெருங்குடி (சென்னை) தலா 6, உத்தண்டி (சென்னை) 5, சிடி மருத்துவமனை தண்டையார்ப்பேட்டை (சென்னை), கொத்தவாச்சேரி (கடலூர்), திருத்தணி (திருவள்ளூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), திருவொற்றியூர் (சென்னை), மணலி (சென்னை) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
14.08.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
15.08.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.