Governor Ravi: "சனாதன பாரம்பரியத்தின் துறவி” திருவள்ளுவரை கையில் எடுத்த ஆளுநர் ரவி - கிளம்பியது சர்ச்சை
திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துடன் தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, "திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
CM MK Stalin: "தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது" ஆளுநருக்கு பதிலடி தந்த முதலமைச்சர்!
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி தரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
Bullet Train: வேற லெவல்! சென்னைக்கு விரைவில் வருகிறது புல்லட் ரயில்! எந்தெந்த வழித்தடம்?
சென்னை - மைசூர் இடையே இந்தியாவின் இரண்டாவது புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ரயில் சேவையை நவீனப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத்தை காட்டிலும் அதிவேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயிலானது பயணிகளின் பயண நேரத்தை மேலும் குறைக்கும். மேலும் படிக்க
Palamedu Jallikattu 2024: உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்! ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்!
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு என்றால் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. அந்த வகையில், உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு மேல் வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது. இப்போட்டியில் பங்கேற்க ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டோக்கன்பெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு காலை முதல் மறு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு பின் போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளது. பாலமேடு மஞ்சமலையாற்றில் உள்ள நிரந்தர வாடிவாசல், ஆடுகளம், பார்வையாளர்கள் மாடங்களில் 2 அடுக்கு பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
TN Weather Update: "இனி வறண்ட வானிலைதான்! நீலகிரியில் உறை பனி" லேட்டஸ்ட் வானிலை ரிப்போர்ட்
குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் படிக்க