Governor Ravi: திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துடன் தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தின் இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. வள்ளுவரின்  பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.


”சனாதன பாரம்பரியத்தின் துறவி"


இந்த நிலையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்திகிறேன் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, "திருவள்ளுவர் தினத்தில்,  ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை  செலுத்துகிறேன்.






அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும்  உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.  






இதை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் திருவள்ளுரின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது சர்ச்சையாக வெடித்துள்ளது.  இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. ஏற்கனவே, ஆளுநர் ஆர்.என்.ரவி, வள்ளலாரை சனாதன தர்மத்துடன் இணைத்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Khushbu: கோட் சூட்டில் இருக்கும் திருவள்ளுவர் படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த குஷ்பு; பாஜகவுக்கு எதிராக செயல்படுகிறாரா?