விழுப்புரம் - புதுச்சேரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இன்று முதல் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிப்பு, மாற்றுப் பாதையில் வாகனங்கள் செல்ல தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

 

ரயில்வே கிராசிங்கில் உயர்மட்ட மேம்பாலம் பணி

 

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் வரையிலான 194 கிமீ தூரத்திற்கு ரூ.6,500 கோடி செலவில் 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கண்டமங்கலம் ரயில்வே கிராசிங்கில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளதால் அவ்வழியாக இன்று முதல் வாகனங்கள் செல்ல தடை விதிப்பு.

 

போக்குவரத்து மாற்றம் 

 

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருவாண்டார்கோவில், கொத்தம்புரிநத்தம், வணத்தம்பாளையம், சின்னபாபு சமுத்திரம், கெண்டியாங்குப்பம், அரியூர் வழியாக மாற்றுப்பாதையில் புதுச்சேரி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அரியூர், சிவராந்தகம், கீழூர், மண்டகப்பட்டு, பள்ளிநெளியனூர், திருபுவனை வழியாக மாற்றுப்பதையில் விழுப்புரம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுப்பாதையில் 10 கிமீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கும், பயணிகளுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.