- DMK vs AIADMK: தி.மு.க. vs அ.தி.மு.க.! மக்களவைத் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் நேரடி மோதல் தெரியுமா?
மக்களவை தேர்தலுக்கான தேதி எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை அதற்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, முதல் கட்டமாக தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகளாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் கூட்டணி அமைத்து வருகின்ற மக்களவை தேர்தலை சந்திக்கின்றன. மேலும் படிக்க
- DMK Candidates: தி.மு.க. வேட்பாளர்களில் இத்தனை பேர் வாரிசுகளா? பட்டியலை நீங்களே பாருங்க!
மக்களவை தேர்தலுக்கான திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், பெரும்பாலும் வாரிசு வேட்பாளர்களே அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி (முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கை ஆவார்.) தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் (தமிழகத்தின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சரான வி. தங்கப்பாண்டியனின் மகளும், தற்போதைய தமிழ்நாட்டின் நிதியமைச்சரான தங்கம் தென்னரசின் அக்காவும் ஆவார்.) மேலும் படிக்க
- Lok Sabha Election 2024:ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்கள் அறிமுகம் - அதிரடி காட்டிய சீமான்
நாம் தமிழர் கட்சி தொடங்கியது முதலே யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டு வருகிறது. பிற கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகள் மேற்கொண்டு வந்தபோது கடந்த மாதம் 20ஆம் தேதி முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சி அறிவித்தது. அதில் 10 பெண் வேட்பாளர்கள், 10 ஆண் வேட்பாளர்கள் என மொத்தம் 20 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மேலும் படிக்க
- DMK Manifesto: "சிலிண்டர் விலை ரூ.500! பெட்ரோல் டீசல் விலையும் குறைக்கப்படும்" தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் அதிரடி!
இந்த தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு தொடர்பான அறிவிப்புகள் பல இடம்பெற்றிருந்தது. இதில் முக்கியமாக ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை, மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம், இசுலாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும், சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும், நீட் தேர்வு ரத்து, புதிய கல்விக் கொள்கை ரத்து ஆகியவை முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க
- CM MK Stalin: "மோடி ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல" முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!
திமுக தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் அறிவிப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், “தேர்தலுக்கு முன்பாக ஒரு அறிக்கை தயாரித்து பொறுப்புக்கு வந்த பிறகு அதை முழுமையாக நிறைவேற்றி காட்டுவது தான் திமுக. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க முடிவு செய்து கனிமொழி எம்.பி., தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. மேலும் படிக்க